திருப்பூரில் தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்
20 Nov 2025, 3:46 pm
<p><strong>திருப்பூரில் தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்</strong></p>
<p>திருப்பூர், நவ.20- பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரி யர் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறி வியாழனன்று 100க்கும் மேற்பட்ட மாணவர் கள் டவுன் ஹால் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்ற னர். மிகவும் பழமையான பள்ளி என்பதால், திருப்பூர் மாநகர் மட்டுமல்லாமல் சுற்று வட் டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாண வர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்நி லையில் 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு பொதுத்தேர்வு விரைவில் வரக் கூடிய சூழலில், சிறப்பு வகுப்புகள் எடுக்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புத னன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கான சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடை பெற்றதால், மாநகரின் பல்வேறு பகுதிக ளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் பேருந்து கள் இன்றி மிகவும் சிரமத்திற்குள்ளாகி யுள்ளனர். மேலும், வீடுகளுக்கு செல்ல இரவு 8 மணிக்கு மேல் ஆகியுள்ளது. இதனால், சிலர் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்காமல் வீட் டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வியாழனன்று காலை பள் ளிக்கு வந்த மாணவர்களை தலைமை ஆசிரி யர் ஆபாசமான வார்த்தைகளில், தரக்குறை வாக திட்டியதாக கூறி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் டவுன்ஹால் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் சிலர் கூறுகை யில், எங்கள் மீது தவறு இருந்தால் ஆசிரியர் கள் முறையான வார்த்தைகளை பயன்ப டுத்தி திட்டட்டும். ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தலைமை ஆசிரியர் அப்பா, அம் மாவை குறிக்கும் வகையில் தரக்குறைவாக பேசுவது, சத்துணவு உண்பதை கேவலப்ப டுத்துவது, கல்வி உதவித்தொகை பெறு வதை குறித்து பேசுவது, சாதிரீதியாக பேசு வது என மிகவும் கொச்சையாக பேசுகி றார். இவரை எங்கள் பள்ளியில் இருந்து மாற்ற வேண்டும் என கூறினர். இதற்கிடையில், சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை யினர் அப்புறப்படுத்தி டவுன்ஹால் வளாகத் திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு கல்வி அலுவலர் உள்ளிட்டோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகார் மனு அளித்ததை தொடர்ந்து பள்ளிக்கு சென் றனர். இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப் பட்ட தலைமை ஆசிரியர் கூறுகையில், திருப் பூரின் அடையாளமாக உள்ள நஞ்சப்பா ஆண் கள் மேல்நிலை பள்ளி மாவட்டத்தில் உள்ள 154 பள்ளிகளில் 153 ஆவது இடத்தில் உள் ளது. கடந்த காலாண்டு தேர்வில் தேர்ச்சி விகி தம் மிகவும் குறைந்துவிட்டது. அதனால் இந்த இடைப்பருவ தேர்வு சிறப்பு வகுப்புகள் நடை பெறுகிறது. இதில் செவ்வாயன்று மாண வர்கள் வகுப்புக்கு வராமல் சென்று விட்டனர். புதனன்று பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் கட்டாயம் வியாழனன்று பெற்றோர்களை அழைத்து வரும்படி தெரிவித்தேன். ஆனால் இன்று மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவில்லை. இதுகுறித்து கேட்ட தற்குத் தான் பள்ளியை விட்டு வெளியே சென்று விட்டனர் என்றார்.</p>
<p> </p>
