மாணவர் சங்கத் தலைவரை தாக்கி கைது செய்த காவல்துறை டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>மாணவர் சங்கத் தலைவரை தாக்கி கைது செய்த காவல்துறை டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்</strong></p>
<p>சிவகாசி, ஜன.27- சிவகாசியில் கல்லூரி மாணவியின் தற் கொலைக்கு காரணமானவர்கள் மீது நட வடிக்கை எடுக்காத காவல்துறை, போராட் டத்தில் ஈடுபட முயன்ற மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் உட்பட 17 பேரைக் கைது செய்தனர். சிவகாசியில் உள்ளது அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி. இங்கு படித்து வந்த மாணவி நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கையால் தற்கொலை செய்து கொண்டார். எனவே, அதற்கு காரணமான கல்லூரி முதல்வர் மற்றும் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஜன.23இல் மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். பின்பு நடந்த பேச்சுவார்த்தையில் கல் லூரி முதல்வர் மற்றும் உதவியாளர் ஆகி யோரை வழக்கில் சேர்ப்பது, இருவரையும் பணியிடைநீக்கம் செய்வதோடு, மாணவி யின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது என உறுதியளித்தனர். ஆனால் அதன் அடிப்ப டையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதன் காரணமாக, மீண்டும் போராட்டத் தில் ஈடுபட கல்லூரி வாசல் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆனந்தகண்ணன் தலைமையில் மாண வர்கள் கூடினர். இந்த நிலையில், நின்று கொண்டிருந்த ஆனந்தகண்ணன் உள்ளிட்ட மாணவர் களை சீருடையில் இல்லாத காவலர் ஜெயக் குமார் என்பவர் தாக்கி வலுக்கட்டாயமாக இழுத்து வாகனத்தில் ஏற்றியுள்ளார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் சக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, 17 பேரை காவல்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்தனர். காவல்துறையினரின் அநீதியான இந்த நடவடிக்கையை அறிந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தன்னெழுச்சியாக திருவில்லி புத்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு குவிந்தனர். தகவலறிந்து டி.எஸ்.பி சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். மாநில துணைத் தலைவர் சைலஸ் அருள்ராஜ், மாவட்டத் தலைவர் பால்பாண்டி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், கல்லூரி முதல் வரை தற்காலிகமாக பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் என தெரி வித்தனர். நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முன்னதாக கைதான மாணவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பி.என்.தேவா, பி.மாரி யப்பன், எஸ்.வி.சசிக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் வி.ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். </p>
