தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் கல்லூரி விடுதியின் தரமற்ற உணவால் மாணவிகள் பாதிப்பு - மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

19 Feb 2026, 3:09 pm
தனியார் கல்லூரி விடுதியின் தரமற்ற உணவால்  மாணவிகள் பாதிப்பு - மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>தனியார் கல்லூரி விடுதியின் தரமற்ற உணவால் &nbsp;மாணவிகள் பாதிப்பு - மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கோவை, பிப்.19- கோவையில் உள்ள தனியார் &nbsp;கல்லூரி விடுதிகளில் வழங்கப்ப டும் தரமற்ற உணவால் மாணவிகள் &nbsp;தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதை கண்டித்து இந்திய &nbsp;மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதிகளில் அண்மைக்காலமாக உணவு பாது காப்பு என்பது பெரும் கேள்விக் குறியாகி உள்ளது. குறிப்பாக புத னன்று (பிப்.18) கோவை அபிராமி கல்லூரியில் வழங்கப்பட்ட தர மற்ற உணவை உட்கொண்ட 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹிந் துஸ்தான் பொறியியல் கல்லூரி யில் 100-க்கும் மேற்பட்ட மாணவிக ளும், மூன்று வாரங்களுக்கு முன்பு கங்கா செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளும் தரமற்ற உணவால் கடுமையாகப் பாதிக் கப்பட்டனர். இந்நிலையில், தனியார் கல் லூரி விடுதிகளில் இதுபோன்ற &nbsp;விரும்பத்தகாத நிகழ்வுகள் &nbsp;தொடர்ச்சியாக நடைபெற்று வருவ தாகவும், கல்லூரிகளின் பெயரை &nbsp;காப்பாற்றுவதற்காக பாதிக்கப் பட்ட மாணவிகளுக்கு தங்களுக்கு &nbsp;சொந்தமான மருத்துவமனைகளி லேயே சிகிச்சை அளித்து இந்த &nbsp;விவகாரத்தை நிர்வாகங்கள் மூடி மறைக்கின்றனர். எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, கோவையில் உள்ள &nbsp;அனைத்து தனியார் கல்லூரி விடுதி களிலும் உணவு பாதுகாப்புத் துறை &nbsp;மூலம் ஆய்வு நடத்தி, உணவு மற் றும் குடிநீர் தரமாக வழங்கப்படு வதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, மாணவர்களுக்கு சுத் திகரிக்கப்பட்ட (RO) குடிநீர் வழங்கு வதை மாவட்ட நிர்வாகம் கட்டாய மாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வியாழ னன்று இந்திய மாணவர் சங்கத்தி னர் கோவை மாவட்ட ஆட்சியர் &nbsp;அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் &nbsp;பாவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அகமது &nbsp;ஜூல்ஃபிகர் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியர் அலு வலகத்தில் அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.