முந்தய பக்கம்

மாணவர்கள் அறிவியல் சுற்றுலாப் பயணம்

19 Nov 2025, 3:33 pm
மாணவர்கள் அறிவியல் சுற்றுலாப் பயணம்
<p><strong>மாணவர்கள் அறிவியல் சுற்றுலாப் பயணம்</strong></p> <p>திருப்பூர், நவ.19- திருப்பூர் மாவட்ட &nbsp;நிர்வாகம், பள்ளிக் கல் வித்துறை இணைந்து, மேல் நிலை வகுப்பு &nbsp;முதலாம் ஆண்டு (பிளஸ் 1) மாணவ, மாணவி களை அறிவியல் சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் புது ராமகிருஷ்ணபுரம், கணக் கம்பாளையம், உடுமலை பெண்கள் மேல்நி லைப் பள்ளி, மூலனூர், பெருந்தொழுவு ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் &nbsp;வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளை அறி வியல் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு &nbsp;செய்தனர். மொத்தம் 50 மாணவ, மாணவிகள் &nbsp;இந்த சுற்றுலாவில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய் அன்று மாவட்ட ஆட் சியர் மனிஷ் நாரணவரே மாணவ, மாணவி களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் ஆ. புனிதா அந் தோணி அம்மாள் மற்றும் ரோட்டரி தலைவர் &nbsp;ஆனந்த ராமன், மெட்டல் டவுன் ரோட்டரி சங் கத்தினர் பங்கேற்றனர். இந்த அறிவியல் சுற்றுலாவில் திருவ னந்தபுரம் சென்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விக்ரம் &nbsp;சாராபாய் விண்வெளி மையத்தில் ராக்கெட் ஏவுதலை இவர்கள் பார்வையிடுகின்றனர். &nbsp;மேலும் விண்வெளி அருங்காட்சியகம் உள்ளிட்ட அறிவியல் சார் தளங்களுக்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. &nbsp;இந்த அறிவியல் சுற்றுலா முழுவதையும் தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்டக்குழு ஒருங்கிணைத்துள்ளது. திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கத்தி னர் ஸ்பான்சர் செய்திருக்கும் இந்த அறி வியல் சுற்றுலா பயணக் குழுவினருடன் தமிழ் நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா ளர் கௌரி சங்கர் வழி நடத்திச் செல்கிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram