தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஞானேஷ் குமார் பதவி விலக கோரி அக். 9 தமிழகம் முழுவதும் மாணவர் - வாலிபர் பேரணி

6 Oct 2026, 10:12 pm
ஞானேஷ் குமார் பதவி விலக கோரி அக். 9 தமிழகம் முழுவதும் மாணவர் - வாலிபர் பேரணி
<p><strong>ஞானேஷ் குமார் பதவி விலக கோரி அக். 9 தமிழகம் முழுவதும் மாணவர் - வாலிபர் பேரணி</strong></p><p>சென்னை, அக். 6 –இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், தேர்தல் நடைமுறைகளில்வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியும் அக்டோபர் 9 அன்று தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டனப் பேரணிகள் நடைபெறவுள்ளன.இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமை, தேர்தல் வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்தல் ஆணையத்தின் சுயேச்சைத் தன்மைபாதுகாக்கப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு வெளிப்படையானவிளக்கங்கள் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்நிலையில், ‘இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் இந்தப் பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.சென்னை, மதுரை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 முக்கிய மையங்களில் இப்பேரணிகள் நடைபெறுகின்றன. வாக்காளர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், தேர்தல் ஆணையம் அரசியல் சார்பற்ற முறையில் செயல்பட வலியுறுத்தியும் நடைபெறும் இப்பேரணிகளில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்குமாறு இரு சங்கங்களின் மாநிலக் குழுக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.