தேசிய பாரா நீச்சல் போட்டியில் மூன்று தங்க பதக்கம் வென்ற மாணவர்
20 Nov 2025, 3:46 pm
<p><strong>தேசிய பாரா நீச்சல் போட்டியில் மூன்று தங்க பதக்கம் வென்ற மாணவர்</strong></p>
<p>திருப்பூர், நவ. 20 – ஹைதராபாத்தில் நடைபெற்ற 25 ஆவது தேசிய பாரா நீச்சல் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வென்ற திருப்பூர் மாவட்ட மாணவர் ஆர்.சபரி ஆனந்த்தை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே நேரில் வரவழைத்துப் பாராட்டினார். திருப்பூர் மாவட்டம் அவிநாசிலிங் கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக் கும் மாணவர் ஆர்.சபரிஆனந்த் (14). இவர் ஹைதராபாத் நகரில் கடந்த 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய பாரா நீச்சல் போட்டி யில் பங்கேற்று மூன்று பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். அவிநாசிலிங்கம்பாளையத்தில் உள்ள ராஜா, சுசிகலா தம்பதியரின் மகன் சபரி ஆனந்த். இவரது தந்தை ராஜா தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். மாணவர் சபரி ஆனந்த்திற்கு சிறு வயதிலேயே நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நெல்லையில் நெப்போலியன் மருத்துவமனையில் தண்டுவட அறுவை சிகிச்சை செய்தனர். அங்கு பிசியோதெரபி மருத்துவர் மூலம் தற்காப்பு, கை கால் இயக்கத்திர்கு நீச்சல் பயிற்சி அளித்துள்ளனர். இதில் இவர் நன்றாக நீந்துவதை கவனித்து தொடர்ந்து பயிற்சி அளிக்கும்படி அங் குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். அதையேற்று திருப்பூர் வந்த பிறகும் தொடர்ந்து நீச்சல் பயிற்சி அளித்துள்ள னர். இதன் பிறகு கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டி யில் பங்கேற்று மூன்று பிரிவுகளில் தங் கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா நீச்சல் போட்டி யிலும் கலந்து கொண்டு மூன்று பதக்கங் கள் வென்றார். கோவை அமிர்தா கல்லூ ரியில் நடைபெற்ற போட்டியிலும் பங் கேற்று வெற்றி பெற்றார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற தேசிய பாரா நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். இவரது சாதனை குறித்து சபரி ஆனந்தின் தந்தை ராஜாவிடம் கேட்ட போது, தண்டுவட அறுவை சிகிச்சை யைத் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற் கொண்டார். மருத்துவர்கள் அறிவுரைப் படி தொடர்ந்து பயிற்சி அளித்தோம். இதற்கு கல்வித்துறை, விளையாட்டுத் துறை மற்றும் தனியார் அறக்கட்டளைக ளும் தொடர்ந்து ஆதரவளித்தனர். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப் புடன் சபரி ஆனந்த் தொடர்ந்து பாரா நீச்சல் போட்டிகளில் சாதனை செய்து வருகிறார் என்று கூறினார். இந்நிலையில் மாணவர் சபரி ஆனந்த்தை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, வியாழனன்று மாவட்ட ஆட்சியரகத்திற்கு அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் உட னிருந்தார்.</p>
