தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மரமில்லில் வேலை பார்த்த மாணவர் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சாதனை

16 Nov 2025, 3:30 pm
மரமில்லில் வேலை பார்த்த மாணவர் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சாதனை
<p><strong>மரமில்லில் வேலை பார்த்த மாணவர் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சாதனை</strong></p> <p>அறந்தாங்கி, &nbsp; &nbsp;நவ.16- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகிலுள்ள மேற்ப னைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் - செல்வ குமாரி ஆகியோரின் மகன் விவேக்கீஸ்வரன். மேற்பனைக் காடு அரசு பள்ளியில் படித்து 10, 11, 12 ஆம் வகுப்புகளில் பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற விவேக்கீஸ்வரன் மருத்துவராக விருப்பம் இருந்த நிலையில், காரைக் குடி அழகப்பா பல்கலைக்கழ கத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்துள்ளார். தனது படிப்புச் செலவிற்காக கீரமங்கலத்தில் உள்ள ஒரு மர அறுவை மில்லில் விடுமுறை நாட்களில் வேலை செய்து கிடைக்கும் சம்பளத்தில் படித்து வந்துள்ளார். இளங்கலை படித்தா லும் மருத்துவர் ஆகும் கனவு அப்படியே இருந்திருக்கிறது. நீட் தேர்வையும் எழுதியிருக்கிறார். கடந்த ஆண்டு காரைக்குடியில், ஒரு தனியார் பயிற்சி மையத்தில் இல வசப் பயிற்சி பெற்று 487 மதிப்பெண் பெற்றாலும், மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. கல்லூரி இளங்கலைப் படிப்பும் முடிந்தது. ஆனாலும் தனது முயற்சியை விடாத மாணவர், இந்த ஆண்டு நீட் எழுதி 427 மதிப்பெண்கள் பெற்ற போது முதல் 2 கலந்தாய்வுகளிலும் சீட் கிடைக்கா மல் போனது. இந்நிலையில் 3ஆவது கலந்தாய்வில் 7.5% ஒதுக்கீட்டில் முதல் சீட் விவேக்கீஸ்வரனுக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து அவர் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூ ரியில் சேர்ந்துள்ளார். பல தடை களைத் தாண்டி அரசின் சலுகை களைப் பெற்று படித்து, தனது மருத்துவக் கனவை நிறைவேற்றிக் கொண்ட விவேக்கீஸ்வரன், கல் லூரி செல்ல உள்ள நிலையிலும், வழக்கம் போல மர அறுவை ஆலை யில் வேலை செய்து வருகிறார். விடுமுறை நாட்களில் மர அறுவை மில்லில் வேலை செய்து விடா முயற்சியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். படிக்கச் செல்லும் கிராமப்புற மாணவர் விவேக்கீஸ்வரனுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.