இரண்டாவது நாளாகத் தொடர்ந்த மாணவர் எழுச்சி
21 Jul 2026, 9:14 pm

இரண்டாவது நாளாகத் தொடர்ந்த மாணவர் எழுச்சி

தடியடி - கைதுகளையும் மீறி ஜந்தர் மந்தரில் பல்லாயிரக்கணக்கில் குவிந்த இளைய தலைமுறை

புதுதில்லி, ஜூலை 21- ஒன்றிய பாஜக அரசின் நீட்-யுஜி வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ ஆன்லைன் மதிப்பீ ட்டு முறைகேடுகள் மற்றும் கல்விச் சீர்திருத்தவாதி சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டது உள்ளி ட்டவற்றைக் கண்டித்து தில்லி யில் மாணவர்கள் நடத்திய ‘சன்சத் சலோ’ (நாடாளுமன்றம் நோக்கி) பேரணியில் பெரும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது மோடி அரசு. காவல்து றையினரின் கொடூரமான தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுவீச்சையும் மீறி, தில்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டம் ஜூலை 21 செவ்வாயன்று இரண்டாவது நாளாகத் தீவிரமடைந்துள்ளது.

ஜூலை 20: தில்லி வீதிகளில் தாக்குதல் மற்றும் சேத விவரங்கள்

ஜூன் 28 முதல் சோனம் வாங்சுக் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் 21-வது நாளில் அவர் காவல்துறையால் பலவந்தமாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 20 அன்று நாடாளும ன்றத்தை நோக்கிய பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கனமழை மற்றும் தடை உத்தரவுகளையும் மீறி 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாண வர்கள் தலைநகரில் திரண்டனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஐந்து முக்கிய மெட்ரோ நிலை யங்கள் மூடப்பட்டதுடன், மத்திய தில்லியின் 150 இடங்களில் மொபைல் இணை யச் சேவை முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. இருப்பி னும், தடைகளை உடைத்துக் கொண்டு பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது கான்ஸ்டிடியூஷன் கிளப் அருகே காவல்துறையினர் கடுமை யான தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுவீச்சை நடத்தினர். இந்த வன்முறையில் 180-க்கும் மேற்பட்ட மாணவர்கள் - இளைஞர்கள் காயமடைந்தனர். ஒரு மாணவி குண்டுக் காயங்களுடனும், மற்றொரு மாணவி செயற்கை சுவாசக் கருவி உதவியுடனும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் சமாஜ்வாதிகட்சி எம்பி டிம்பிள் யாதவ் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பல அரசு வாக னங்கள் சேதமடைந்தன. போராட்டக் காரர்கள் வன்முறையில் ஈடுபட்ட தாகக் காவல்துறை கூறியபோதிலும், போராட்டக்காரர்களைக் குற்றவாளி யாக்கக் காவல்துறையினரே கல் நிரப்பிய லாரியை நிறுத்தி யிருந்ததாகச் சான்றுகளுடன் சிஜேபி அம்பலப்படுத்தியது.

கைதுகளும் சட்டவிரோதத் தடுப்புகளும்: சத்ராசால் ஸ்டேடியத்தில் மனித உரிமை மீறல்கள்

போராட்டத்தின் எதிரொலியாக தில்லி முழுவதும் சுமார் 50 பேர் வரை காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 38 பேர் முதலில் புராரி காவல் நிலை யத்தில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜூலை 21 அன்று மாலை 5:30 மணி யளவில் சத்ராசால் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்கள் அனை வரும் ஸ்டேடியத்தின் ஷெட் பகு திக்கு கீழே அமர வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது குடும்பத்தின ரும் அங்கு காத்திருக்கின்றனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த 38 பேரின் விவரங்கள் பின்வருமாறு: குல்தீப், அபிஷேக், சேத்தன், அகில், ஷாகித், ஹஸ்னைன், திலீப், பிரகாஷ், ஆயுஷ், அசுதோஷ், ஆகாஷ், லட்சுமிதர் நாயக், நரேந்தர், ரோகித், நீரஜ், ராகுல், இஷான், அமித், அசு, ஷியாம், அமித் யாதவ், புத்நேய், ஜிதேந்தர், சந்திரபான், ஷாவிஸ், அசு யாதவ், அஸ்வானி, அங்கித் யாதவ், அமன் ராஜ், கம்லேஷ், அக்ஷித், ஷாத்ஷாத், ககனா சவுகான், அடில், பிரின்ஸ், அமித், மோனு மற்றும் ஜிதேந்தர் ஆகியோர் ஆவர் .

சத்ராசால் ஸ்டேடியத்திற்கு வெளியே வருகை தந்த வழக்கறி ஞர்கள் மற்றும் சட்ட உதவிக்குழு வினரை வளாகத்திற்குள் நுழை யவோ, அதிகாரிகளையோ அல்லது தடுத்து வைக்கப்பட்டவர்களையோ நேரில் சந்திக்கவோ காவல்துறை யினர் அனுமதி மறுத்துள்ளனர். இத னால் தடுத்து வைக்கப்பட்டவர்களின் நிலை என்னவென்பதை உறுதிப் படுத்தவோ, முறையான சட்ட உதவிகளை வழங்கவோ அல்லது அவர்களின் உரிமைகள் பாதுகாக்க ப்படுவதை உறுதிப்படுத்தவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டவர்கள் மீது முறையான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா அல்லது முறையான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அறியவும், அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்தவும் சட்ட உதவிக் குழுவினர் தீவிரமாக முயன்று வருவதுடன், நிலைமையை அருகில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, லண்டனில் இப்போராட்டத்திற்கு ஆதர வாகத் தீவிரமான ஆதரவுப்போராட்ட ங்களும் நடத்தப்பட்டுள்ளன.

இரவிலும் தொடர்ந்த போராட்டம்; ஜந்தர் மந்தரில் மீண்டும் எழுச்சி

ஜந்தர் மந்தரில் இருந்த போராட்ட மேடையைக் காவல்துறையினர் அகற்றியபோதிலும், மாணவர்கள் பின்வாங்கவில்லை. இரவு முழுவதும் கேரள ஹவுஸ் அருகே அமர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ஜூலை 21 செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணி முதல் ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டம் மீண்டும் முழுமையாகத் திரண்டு அதிரடியாகத் தொடர்ந்தது. காவல்துறையின் அடக்குமுறைகளையும் தடியடி களையும் தாண்டி மாணவர்கள் மீண்டும் போராட்டக்களத்திற்கு திரும்பியுள்ளனர்.

இதனிடையே, 23 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அகில இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களை, சிபிஐ(எம்) எம்பி அம்ரா ராம், ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா, சிபிஐ(எம்.எல்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, யோகேந்திர யாதவ், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், பேராசிரியர் அதுல் சூட், திரைக்கலைஞர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் திரைக்கலைஞர் ஷபானா ஆஸ்மி ஆகியோர் அடங்கிய குழு நேரில் சந்தித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. யோகேந்திர யாதவ் கூறுகையில், இது உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவு அல்ல, இந்த வடிவத்திலான போராட்டத்தின் நிறைவு மட்டுமே என்றார். மனோஜ் ஜா எம்.பி. பேசுகையில், அரசை அனைத்து முனைகளிலும் அம்பலப் படுத்தியதன் மூலம் மாணவர்கள் ஏற்கெனவே மிகப்பெரிய வெற்றி யைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட் டார்.

பண்பாட்டுத் துறை பிரபலங்களின் நேரடி முழக்கம்

இப்போராட்டத்திற்கு கலை மற்றும் பண்பாட்டுத் துறையின ரின் ஆதரவு பெருமளவில் கிடைத்துள்ளது. ஜூலை 20 பேரணியில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கையில் ஏந்தி உரையாற்றிய திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ், ‘உண்மையைப் பேசுவ தற்கு ஏன் பயப்பட வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார். ‘நாளை வர லாறு எழுதப்படும் போது மவுன மாக இருந்தவர்களைச் சமூகம் மன்னிக்காது’ என்றும் அவர் எச்சரித்தார்.

திரைக்கலைஞர் ஷபானா ஆஸ்மி, திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், பாடகர் தில்ஜித் தோசாஞ்ச், நடிகர்கள் நசீருதீன் ஷா, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மாணவர் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவைப் பதிவு செய்துள்ளனர். மருத்துவ மாணவர்கள் அமைப்பான ஃபேமா இத்தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் உறுதியேற்றுள்ளனர்.