கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர் சங்கம் போராட்டம்
25 Feb 2026, 3:22 pm
<p><strong>கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர் சங்கம் போராட்டம்</strong></p>
<p>சேலம், பிப். 25- கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு ஆதர வாக, சேலத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்புகளை புறக்கணித்து புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் அனைவ ருக்கும் யுஜிசி விதிகளின்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விரிவுரையாளர்களின் இந்தப் போராட்டத்தினால் கல் லூரிகளில் வகுப்புகள் நடைபெறாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், விரி வுரையாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு உடனே ஏற்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அரசு கலைக் கல்லூரி யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கே. டார்வின் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். பவித்ரன், துணை நிர்வாகிகள் கோகுல்ராஜ், நவீன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாண வர்கள் பங்கேற்றனர்.</p>
<p> </p>
