டிரம்ப்பைக் கண்டித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்
6 Jan 2026, 3:29 pm
<p><strong>டிரம்ப்பைக் கண்டித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்</strong></p>
<p>வெனிசுலா ஜனாதிபதி மதுரோவைக் கடத்திய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும், மதுரோவைக் விடுதலை செய்யக்கோரியும் செவ்வாயன்று (ஜன.6) சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் டிரம்ப் புகைப்படத்தை கிழித்தெறிந்தும், அமெரிக்கக் கொடியை எரித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர் சங்கத்தினர் மற்றும் காவல்துறையிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் மு. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கு. தமிழ், துணைத் தலைவர் சாரதி உள்ளிட்டோர் பேசினர்.</p>
