விடுதியில் மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் சங்கம் மனு
27 Jan 2026, 3:28 pm
<p><strong>விடுதியில் மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் சங்கம் மனு</strong></p>
<p>கோவை, ஜன.27- செவிலியர் கல்லூரி விடுதியில் உணவு, குடிநீர் அருந் திய மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தி னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். கோவை, துடியலூர் அடுத்த வட்டமலையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கங்கா செவிலியர் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் அதே பகுதியில் உள்ள கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதி உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்ட 33 மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதை யடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மாணவிகள் கல்லூரிக்கு சொந்த மான மருத்துவமனையிலும், விடுதியிலும் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த உணவு பாது காப்புத் துறையினர் விடுதியில் சமைக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசாரும் விசாரணை மேற் கொண்டு வருகின்ற நிலையில், கங்கா செவிலியர் கல்லூ ரிக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தரம் இல்லாத குடிநீர் விநியோகம் செய் யப்பட்டதால் மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட தாகவும், அதன் உண்மை தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் பாவேல், மாவட்டச் செயலாளர் அக மது ஜூல்பிகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மனு அளித்த னர். விடுதிக்கு வரும் அதே குடிநீர் அப்பகுதி மக்களுக்கும் சென்றுள்ளதால் உரிய விசாரணை மேற்கொண்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கத்தி னர் வலியுறுத்தினர்.</p>
