மாணவி தற்கொலை முயற்சி ஆட்சியரிடம் மாணவர் சங்கம் மனு
8 Jan 2026, 2:44 pm
<p><strong>மாணவி தற்கொலை முயற்சி ஆட்சியரிடம் மாணவர் சங்கம் மனு</strong></p>
<p>கோவை, ஜன.8- கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயற்சித்த விவகா ரத்தில், கல்லூரி முதல்வரின் துண்டுதல் காரணம் என்கிற குற்றச்சாட்டில், உரிய விசாரணை கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை புலியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவர் கடந்த 6 ஆம் தேதியன்று வகுப்பறையில் தூக்க மாத்திரைகள் உண்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி தொடர் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கல்லூரி வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பது தொடர்பாக கல்லூரி முதல்வர், மாணவிகள் மற்றும் ஆசி ரியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும், அப் போது குறிப்பிட்ட ஒரு மாணவியின் புகைப்படத்தையும், ரீல் சையும் காட்டி பேசியதால் மாணவி தற்கொலைக்கு முயன் றதும் தெரியவந்தது. இந்நிலையில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டும், வகையில் நடந்து கொண்ட கோவை அரசு பெண் கள் கலைக் கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் அகமது ஜூல்பிகர், தலைவர் பாவேல் ஆகியோர் வியாழ னன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.</p>
