முந்தய பக்கம்

மாணவர் சங்கம் 2 ஆவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

24 Feb 2026, 3:55 pm
மாணவர் சங்கம் 2 ஆவது நாளாக  வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
<p><strong>மாணவர் சங்கம் 2 ஆவது நாளாக &nbsp;வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்</strong></p> <p>நாகப்பட்டினம், பிப்.24- கௌரவ விரிவுரையாளர்களின் 5 அம்ச கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என நாகப்பட்டினம் செல்லூர் அரசு கலைக் கல்லூரியில், இந்திய மாணவர் சங்கம் சார்பில், 2 ஆவது நாளாக தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மு.முகேஷ் கண்ணன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். புவனேஸ்வரி, மாணவர்கள் &nbsp;800-க்கும் மேற்பட்டோர் 2 ஆவது நாளாக வகுப்பை புறக்கணித்து கௌரவ விரிவுரையாளர்கள் ஆதரவு தெரிவித்து பெருந்திரளாக கலந்து கொண்டனர். &nbsp;தஞ்சாவூர் &nbsp;தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, கிளைச் செயலாளர் திரிஷா தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பு.வசந்த் பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram