தடுத்து நிறுத்துக!
30 Jun 2026, 9:14 pm

தடுத்து நிறுத்துக!

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஒரு தேசியப் பிரச்சனையாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. வேளாண் விளை பொருள்களுக்கு கட்டுப்படி யான விலை கிடைக்காதது, இடு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது, கடன் சுமை, வறட்சி போன்ற பல காரணங்கள் இதற்கு உண்டு. மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகரித்து வந்துள்ளது.

இந்நிலையில், தேசிய குற்ற ஆவணக் காப்ப கம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிபரம் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோ றும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், நாளொன் றுக்கு சராசரியாக 35 மாணவர்கள் உயிரி ழப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் மாண வர்களின் தற்கொலை விகிதம் 60 சதவீதத்திற் கும் மேல் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த தற் கொலைகளின் எண்ணிக்கையில் மாணவர்க ளின் தற்கொலை 7.6 சதவீதத்திலிருந்து 8.5 சத வீதம் வரை உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரி விக்கின்றன.

இந்திய அளவில் மாணவர்கள் தற்கொலை யில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடி யாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

மாணவர்களின் தற்கொலைக்கு தேர்வு முறையே முதல் காரணமாக உள்ளது. மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது தொடர் செய்தியாக உள்ளது. ஒவ்வோராண்டும் நீட் தேர்வின் போது நடை பெறும் மோசடி தொடர் கதையாகிறது.

ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தும் புதிய கல்விக் கொள்கை தேர்வு முறையை மேலும் சிக்கலாகவும், கடினமானதாகவும் மாற்றி யுள்ளது. இந்த முறை முழுமையாக நடை முறைப்படுத்தப்படும் போது, இந்தியாவின் எதிர்காலம் என்று கருதப்படுகிற மாணவர்க ளின் தற்கொலை விகிதம் மேலும் அதிக ரிக்கவே வாய்ப்பு உண்டு.

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கூட சாதியப் பாகுபாடு அதிகரித்து வருகிறது. சாதியக் கொடுமைகளால் பாதிக்கப்படும் மாண வர்கள் தற்கொலை செய்து கொள்வதும் நடை பெறுகிறது. கல்வி வளாகச் சூழல் இன்னமும் பாலின சமத்துவம் உள்ளதாக இல்லை. பாலி யல் பாரபட்சம் மற்றும் கொடுமைகளாலும் தற்கொலைகள் நிகழ்கின்றன. தாராளமய பொருளாதாரக் கொள்கை கல்வியையும் கடைச் சரக்காக மாற்றி வருகிறது. கல்வி என்பது அறிவு என்பது மாற்றப்பட்டு வியாபாரம் என்ற நிலை ஏற்படுத்தப்படுகிறது. மாணவர்களின் தற்கொ லையை முற்றாக தடுத்து நிறுத்தவும், விலை மதிப்பற்ற உயிர்களைப் பாதுகாக்கவும் உரிய நட வடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்.