தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

22 Jan 2026, 2:57 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம் தருமபுரி, ஜன.22- பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகங்களில் வன விலங்கு கணக்கெடுக்கும் பணி புதனன்று துவங்கியது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, ஒகேனக் கல், பென்னாகரம், அரூர், தீா்த்தமலை, கோட்டப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட 8 வனச்சரகங்கள் உள்ளன. ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக் கும் பணி வனத்துறையின் சார்பில் நடைபெற்று வருவது வழக் கம். அந்தவகையில் வனப்பாதுகாப்பு அலுவலர் சி.ஹெச்.பத்மா உத்தரவின் பேரில், தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் பென்னாகரம், ஒகேனக்கல், பாலக் கோடு உள்ளிட்ட வனச்சரகங்களில் புதனன்று வனவிலங்கு கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. அந்தந்த வனச்சரக  அலுவலர்கள், வனவர்கள், வன காப்பாளர்கள், வனகாவலர் கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினா் இப்பணியில் ஈடு பட்டுள்ளனர். இப்பணியானது ஜன.27 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது. தருமபுரி மாவட்டத்திலுள்ள 8 வனச்சரங்கங்க ளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பும் பணி முதல் முறையாக  நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மாணவியை கத்தியால் குத்திய மாணவன்

கோவை, ஜன.22- சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு  தனியார் கல்லூரி வளாகத்தில் சக மாணவியை கத்தியால் குத்திய மாண வரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி  ஒன்றில், முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவியை அதே வகுப்பை சேர்ந்த மாணவன் கத்தியால் குத்திய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இருவரும் நண்பர்களாக பழகி  வந்த நிலையில், அந்த மாணவி மற்ற மாணவர்களுடன் பேசுவது தொடர்பாக மாணவன் எதிர்ப்பு தெரிவித்து வந்த தாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக வும் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழனன்று காலை கல்லூரி வளாகத் தில் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற் பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால்  மாணவியின் கழுத்து மற்றும் கன்னம்  உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம டைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த  மாணவியை மீட்டு, அதே கல்லூரி  குழுமத்தை சேர்ந்த தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித் துள்ளனர். இச்சம்பவம் குறித்து சர வணம்பட்டி காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

நெகிழிக் கழிவுகளில் கலைப் பொருட்கள்

கோவை, ஜன.22- நெகிழிக் கழிவுகளில் கலைப் பொருட்களாக செய்த அரசு  பள்ளி மாணவர்கள் சிறப்பு பரிசு வென்ற அசத்தினர். கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் தூய்மை  பாரத இயக்கத்தின் கீழ் நெகிழிக் கழிவுகளைக் கொண்டு கலைப் பொருட்களாக படைப்பாக்கம் செய்யும் வகையில்  பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் நடைபெற்றது.இதில், ஆனைமலை  சோமந்துறைசித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அளவில் முத லிடமும், கோவை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டி  சிறப்பு பரிசும் வென்றனர். இந்நிலையில், போட்டிகளில்  வென்ற மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றனர்.

புதிய ரயில் இன்று முதல் இயக்கம்

கோவை, ஜன.22- கோவை வழியாக ஐதராபாத்திற்கு  புதிய அமிர்த பாரத் ரயிலின் தொடக்க  கால சிறப்பு ஓட்டம் இன்று தொடங்கு கிறது. கேரளம் மாநிலம், திருவனந்தபுரம் வடக்கு மற்றும் தெலுங்கானா மாநி லம் ஐதராபாத் (சார்லப்பள்ளி) இடையே புதிய அமிர்த பாரத் வாராந் திர விரைவு ரயில் சேவையை ரயில்வே  அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயிலின் தொடக்க கால சிறப்பு ஓட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வண்டி எண் 06308 கொண்ட இந்த சிறப்பு ரயில், திரு வனந்தபுரம் வடக்கிலிருந்து காலை  10.45 மணிக்குப் புறப்பட்டு, பாலக்காடு  வழியாக இரவு 7.35 மணிக்கு கோவை  சந்திப்பு வந்தடையும். கோவையி லிருந்து இரவு 7.40 மணிக்குப் புறப் பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி  வழியாக தெலுங்கானா மாநிலம் சால் லப்பள்ளியை நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்குச் சென்றடையும். கோவையிலிருந்து ஐதராபாத் மற்றும் ஆந்திர மாநிலத்தின் முக்கிய  நகரங்களுக்கு செல்லும் பயணி களுக்கு இந்த புதிய வாராந்திர ரயில் சேவை பெரும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட  மக்கள் தொடர்பு அலுவலகம் வெளி யிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.