நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
yesterday
<p><strong>நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>விருதுநகர், ஜூன் 21- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கத்தினர் விருதுநக ரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். விருதுநகர் பழைய பேரு ந்து நிலையம் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாரதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட் டச் செயலாளர் ஆனந்த கண்ணன் கண்டன உரை யாற்றினார். நீட் தேர்வு மாண வர்களின் கல்வி மற்றும் எதிர் காலத்தில் பாதிப்பை ஏற் படுத்துவதாகவும், அதனை ரத்து செய்ய மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், முன்னாள் வாலி பர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.ஜெயபாரத் உள் ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.</p>
