மல்யுத்ததில் வென்ற மாணவருக்கு பாராட்டு
29 Jan 2026, 5:39 pm
<p><strong>மல்யுத்ததில் வென்ற மாணவருக்கு பாராட்டு</strong></p>
<p>தருமபுரி, ஜன.29- மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்ற தருமபுரி அரசுக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு தமிழ்நாடு மல்யுத்த சங்கத்தின் சார்பில், 12 ஆவது மாநில அளவிலான 20 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிருக்கான மல்யுத்த போட்டிகள் சேலம் மாவட்டம், மேட்டூரில் ஜன.24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை மூன்றாமாண்டு மாணவர் ஆர்.சுரேந்திரா கலந்து கொண்டு, 67 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றார். இவருக்கு கல்லூரி முதல்வர் கோ.கண்ணன் தகுதிச் சான்றிதழ், வெற்றி கோப்பை, பதக்கங்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கு.பாலமுருகன், வரலாற்றுத்துறை தலைவர் சாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
