தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லி காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்திற்கு கடும் கண்டனம் நாளை நாடு முழுவதும் மாணவர் வேலைநிறுத்தம்

22 Jul 2026, 9:26 pm
தில்லி காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்திற்கு கடும் கண்டனம்  நாளை நாடு முழுவதும் மாணவர் வேலைநிறுத்தம்

தில்லி காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்திற்கு கடும் கண்டனம் நாளை நாடு முழுவதும் மாணவர் வேலைநிறுத்தம்

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழக வகுப்புகளைப் புறக்கணித்து வீதியில் இறங்குவீர் : இந்திய மாணவர் சங்கம் அழைப்பு

ஒன்றிய மோடி அரசின் கல்வித்துறை தோல்விகளை எதிர்த்து நடைபெற்று வரும் மாணவர் - இளைஞர் போராட்டத்தின் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ள மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தில்லி காவல்துறை நடத்திய அநாகரிகமான மற்றும் கொடூரத் தாக்குதலைக் கண்டித்தும், எதிர்காலப் போராட்ட வடிவங்களை அதிரடியாக அறிவித்தும் இந்திய மாணவர் சங்க மத்தியக் குழுவின் சார்பில் விரிவான மற்றும் வீரியமிக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு கண்டனம்

ஜூலை 20 அன்று நாடாளுமன்றப் பேரணியில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மீதான காவல்துறைத் தாக்குதலை இந்திய மாணவர் சங்கம் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள், இரும்பு முட்கள் கொண்ட தடிகள், மிளகுப் பொடிகள் மற்றும் மின்சார ஷாக் போன்ற கொடூரமான மனித உரிமை மீறல்களில் தில்லி காவல்துறை ஈடுபட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது இடுப்புக்கு மேலே தடியடி நடத்தியதோடு, நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மனித உரிமை ஆணையத்தில்...

ஜூலை 20 அன்று நிகழ்த்தப்பட்ட காவல்துறை அடக்குமுறைகளுக்கு எதிராகத் தேசிய மனித உரிமை ஆணையத்தை இந்திய மாணவர் சங்கம் நாடவுள்ளது. மேலும், நடந்த அத்துமீறல்களையும் மனித உரிமை மீறல்களையும் வெளிக்கொண்டுவர ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் ஆளுமைமிக்க பிரபலங்களை உள்ளடக்கிய ‘மக்கள் விசாரணை ஆணையம்’ (Peoples’s Commission) விரைவில் அமைக்கப்படும்.

தொடர் போராட்டங்கள்

ஜூலை 23: அனைத்து மாநிலங்களிலும் உள்ள ராஜ்பவன், லோக்பவன் அல்லது ஒன்றிய அரசு அலுவலகங்களை நோக்கி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வாலிபர், மாதர், சிஐடியு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் உள்ளிட்ட முற்போக்கு வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். புரட்சியாளர் சந்திரசேகர் ஆசாத் பிறந்தநாள் இப்போராட்டங்களுடன் இணைத்து அனுசரிக்கப்படும். நாட்டின் ஜனாதிபதியின் நேரடித் தலையீட்டையும் மாணவர் சங்கம் அதிகாரப்பூர்வமாகக் கோரவுள்ளது.

ஜூலை 24: இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள அனைத்திந்திய மாணவர் வேலைநிறுத்தம். நாட்டின் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வகுப்புகளை முழுமையாகப் புறக்கணிக்கும் போராட்டம் நடைபெறும். நாட்டின் பிற மாணவர் அமைப்புகளும் இதில் இணைய வேண்டும் என அழைக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் ‘ராத் ஜாகோ, தேஷ் ஜாகோ’ (இரவு விழித்தெழு, தேசம் விழித்தெழு) போராட்டம். நாட்டின் பல்வேறு இடங்களில் ஜந்தர் மந்தர்களை உருவாக்கும் வகையில், பந்தம் ஏந்திய பேரணிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கூடிய இரவு நேரப் போராட்டக் கூட்டங்கள் நடத்தப்படும்.

ஜூலை 25 - 26: நாடு முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு ‘மெலடி’ (Melody) சாக்லேட்டுகளை அன்பளிப்பாக வழங்கும் நூதனமான மற்றும் கிண்டலான ‘ரிட்டன் கிஃப்ட்’ (Return Gift) பிரச்சாரம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும்.

போராட்டங்கள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் காவல்துறையின் அராஜகத்தை விளக்கும் உண்மையான புகைப்படங்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டு, பொதுமக்களின் கையெழுத்து இயக்கங்கள் தீவிரமாக நடத்தப்படும். பாசிச சக்திகளின் கையாட்களிடம் இருந்து தேசத்தையும் அதன் எதிர்காலச் சந்ததியையும் காக்க வீதிகளில் இறங்கிப் போராடும் அனைத்து மாணவர்களுக்கும் இந்திய மாணவர் சங்கம் தனது எழுச்சிமிக்க செவ்வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.