தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவி கோபிகா தற்கொலை: நீட் தேர்வுக்கு எதிராக சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

20 Jun 2026, 11:17 pm
மாணவி கோபிகா தற்கொலை: நீட் தேர்வுக்கு எதிராக சேலத்தில்  மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மாணவி கோபிகா தற்கொலை: நீட் தேர்வுக்கு எதிராக சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 20 - தமிழகத்தில் நீட் தேர்வை நிரந் தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி யும், தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சேலம் மற்றும் கோவை மாணவிகளின் மரணத்தி ற்கு நீதி கேட்டும் சேலத்தில் மார்க்சி ஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் சின் னப்பம்பட்டி வெள்ளாலபுரம் பகுதி யைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள் கோபிகா (19). அரசுப் பள்ளி யில் படித்துவிட்டு, கடந்த மூன்று முறைகளாக நீட் தேர்வு எழுதி வந்துள்ளார். தற்போது மீண்டும் நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலை யில், தேர்வு பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக மாணவி கோபிகா வெள்ளியன்று உயிரை மாய்த்துக் கொண்டார். நீட் தேர்வு அச்சத்தால் தொ டர்ந்து மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது. நீட் தேர்வில் இருந்து தமிழ கத்திற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். உயிரிழந்த சேலம் மற்றும் கோவை மாணவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத் துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் மற்றும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் அமைப்புகள் பங்கேற்றன. வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டார்வின் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். முன்ன தாக, மறைந்த மாணவி கோபிகா வின் உருவப்படத்திற்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப் பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.