மாணவர்களின் வணிக, ஓவியக்கண்காட்சி
8 Feb 2026, 3:55 pm
<p><strong>மாணவர்களின் வணிக, ஓவியக்கண்காட்சி</strong></p>
<p>நாமக்கல், பிப்.8- ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர்கள் சார் பில் வணிக மற்றும் ஓவியக் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற் றது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில், மாணவர்கள் வணிக அறிவை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் “புதியகம்-II” எனும் பெயரிடப்பட்ட வணிக மற்றும் ஓவியக் கண்காட்சி நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. கண்காட்சி அரங்கங் களை பள்ளியின் செயலாளர் வெற்றிச்செல்வன், தாளாளர் எஸ்.ரோஷ்ணி திறந்து வைத்தனர். பாரம்பரிய உணவு முதல் நவீன உணவுகள் என மாணவர்கள் சொந்த மாக தயாரித்து விற்பனை செய்தனர். மேலும், பொருட்க ளின் உற்பத்தி விலை, அடக்கவிலை விற்பனை விலை ஆகிய வற்றை கணக்கிடுதல், சந்தை வாய்ப்புகள், விற்பனை நுட்பங் கள், வாடிக்கையாளர்களை வணிகத்திற்கு ஈர்ப்பது மற்றும் லாபத்தினை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து முறையான பயிற்சிகள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்த னர்.</p>
