தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர் அகிலன் மரணம் ஒரு ‘கல்வி நிறுவனக் கொலை’ பெ. சண்முகம் ஆவேசம்

27 Oct 2026, 8:45 pm
மாணவர் அகிலன் மரணம்  ஒரு ‘கல்வி நிறுவனக் கொலை’ பெ. சண்முகம் ஆவேசம்

மாணவர் அகிலன் மரணம் ஒரு ‘கல்வி நிறுவனக் கொலை’ பெ. சண்முகம் ஆவேசம்

கோயம்புத்தூர், அக். 27 -மாணவர் அகிலனின் மரணம் தற்கொலை மட்டுமல்ல; அது ஒரு திட்டமிட்ட ‘கல்வி நிறுவனக் கொலை’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குற்றம்சாட்டினார்.மாணவர் அகிலனின் மரணத்திற்கு நீதி கேட்டு, 50-க்கும் மேற்பட்ட முற்போக்கு அமைப்புகள் இணைந்து திங்கள்கிழமை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் பங்கேற்றுப் பேசிய பெ. சண்முகம் கூறியதாவது:

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா சாதியப் பாகுபாட்டால் தற்கொலை செய்துகொண்டார். நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டார். தற்போது மாணவர் அகிலனையும் இழந்துள்ளோம்.

ஆசிரியர் விஜயகுமார் வகுப்பறையில் மாணவர்களின் சாதியைக் கேட்டதும், சக மாணவர்கள் தன்னைச் சாதிய ரீதியாகத் துன்புறுத்துவதாக அகிலனும் அவரது தாயாரும் புகார் அளித்திருந்தனர். இருப்பினும், தலைமை ஆசிரியர் அருண்குமார் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதே அகிலனின் விபரீத முடிவுக்கு முக்கியக் காரணம்.

திருக்குறளையும் பாரதியாரையும் போற்றும் ஆசிரியர்கள், அவற்றை வெறும் மதிப்பெண்களுக்கான பாடங்களாக மட்டுமே கற்பிக்கின்றனர். சக மனிதர்களை நேசிக்கும் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்ப்பதில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், குறிப்பாக மேல்நிலை வகுப்புகளில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், 1989-ஐக் கட்டாயப் பாடத்திட்டமாகச் சேர்க்க வேண்டும். சாதியப் பாகுபாட்டைக் கடைப்பிடித்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். சாதியப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்களை எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்.

தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, அகிலனின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், வழக்கை நேர்மையாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நமது கோரிக்கைகளை அவரிடம் வலியுறுத்தினேன். இதையடுத்து, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவதாகவும், அகிலனின் குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்குவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். மேலும், போராட்டத்தைக் கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து எடுத்த கூட்டுத் தீர்மானம் என்பதால், மாவட்டச் செயலாளர் பத்மநாபன் மூலம் அமைச்சரின் தகவலைத் தெரிவித்து, மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் திட்டமிட்டபடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

இந்தப் போராட்டம் கே.கே. நாயுடு பள்ளி நிர்வாகத்தின் அநீதிக்கு எதிரானதே தவிர, நாயுடு சமூகத்திற்கு எதிரானது அல்ல. இப்பிரச்சனையைப் பயன்படுத்திக் கோவை மாவட்டத்தில் சாதியப் பிளவையும் மோதலையும் உருவாக்க நினைக்கும் சக்திகள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும் ஒரே மேடையில் திரண்டு நின்று, சாதிவெறி சக்திகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையாகவே இந்தப் போராட்டம் அமைந்துள்ளது.இவ்வாறு பெ. சண்முகம் பேசினார்.

மாணவர் அகிலன் குடும்பத்திற்கு நிவாரணம்

சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் 6 நாட்களாக நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, மாணவர் அகிலன் குடும்பத்தினருக்கு, அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆறுதல் கூறி, ரூ. 6 லட்சம் நிவாரணத் தொகையையும், அகிலனின் சகோதரி நேத்ராவுக்கு ஆனைக்கட்டி பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையையும் வழங்கியுள்ளார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதி, சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கிரி பிரசாத் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.