முந்தய பக்கம்

ஏழைகளாய்ப் பிறந்ததென்ன

30 May 2026, 10:26 pm
ஏழைகளாய்ப்  பிறந்ததென்ன
<p><strong>ஏழைகளாய்ப் பிறந்ததென்ன</strong></p><p>ஏழைகளாய்ப் பிறந்ததென்ன எங்கள் குற்றமா...? ஆதியிலே பிறந்தவரெல்லாம் எங்கள் சொந்தமா...? நாளெல்லாம் உழைக்கிறோமே நல்ல காலம் பிறக்காதோ...? வருசத்தில் ஒரு நாளேனும் - நாங்கள் நல்லா வாழ்ந்ததில்லையே...! (ஏழைகளாய் தாறுமாறாகப் பேசுறோமென்று தகராறு பண்ணுறானே... கூலி உயர்வு கேட்டாக்கா தலையை வெட்டி வீசுறானே... கேடுகெட்ட சமூகமாக கெட்டழிந்து சாகிறோமே... வீடின்றி வாசலின்றி - நடு ரோட்டில்தான் நிற்கிறோமே... (ஏழைகளாய் வேனலோடு மல்லுக்கட்டி வியர்வையிலே தலை துவட்டி... நாளெல்லாம் உழைத்து நாமும் நாண்டுகிட்டுச் சாகிறோமே... வாழ வழி தெரியலையே வாழ்க்கை முறை புரியலையே... கோடிகளாய்க் குவிக்கிறது - எங்க கூட்டத்துக்கு விளங்கலையே... (ஏழைகளாய் கோபுரமாய் மனதைக் கொட்டி கூரையால வீடு கட்டி நாளெல்லாம் மழையோடு நாங்க தினம் வாழ்கிறோமே... காளைகளாய்ப் பிறக்க வேணும் களைகளைப் பிடுங்க வேணும் நாளை நம் பிள்ளைகளெல்லாம் நல்லுலகம் படைக்க வேணும். (ஏழைகளாய்</p>
Share
FacebookXWhatsAppTelegram