தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூலதனத்தின் கட்டமைப்பு நெருக்கடியும் மாற்றத்திற்கான வழியும் - ஆர்.எஸ். செண்பகம்

21 Aug 2026, 9:05 pm
மூலதனத்தின் கட்டமைப்பு நெருக்கடியும் மாற்றத்திற்கான வழியும் - ஆர்.எஸ். செண்பகம்

மூலதனத்தின் கட்டமைப்பு நெருக்கடியும் மாற்றத்திற்கான வழியும் - ஆர்.எஸ். செண்பகம்

“எதிர்கால நூற்றாண்டுகளின் மொழியில் பேசுவது நமக்கு விதிக்கப்பட்டதாக நான் நம்பவில்லை... நமக்கு நேரத்தை வீணடிக்க அவகாசமில்லை. இந்தக் கோளில் வாழ்வதற்கான நிலைமைகளைப் பாதுகாப்பது, மனித இனத்தைக் காப்பது, வரலாற்றின் போக்கை மாற்றுவது, உலகத்தை மாற்றுவது ஆகியவையே நமக்கு முன் உள்ள சவால்கள்.”

— ஹியூகோ சாவேஸ்

இன்றைய சர்வதேச நிதி மூலதனத்தின் போக்கில், முன்னணி மார்க்சியச் சிந்தனையாளர்

ஜான் பெல்லமி ஃபாஸ்டர் போன்றோரின் ஆய்வுகள்மூலதனத்தின் கட்டமைப்பு நெருக்கடி மற்றும் அதன் பல பரிமாணங்களைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. மூலதனத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி பொருளாதாரத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை; வர்க்க உறவுகள், சொத்து உறவுகள், அரசு, குடும்பம், பாலின உறவுகள் மற்றும் இன ஒடுக்குமுறை என அனைத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனுடன் ஒருங்கிணைந்த சமூகக் கலாச்சாரமும் சிதைந்து, மூடநம்பிக்கை மற்றும் பிற்போக்குத்தனம் போன்ற பகுத்தறிவுக்கு எதிரான போக்குகள் மீண்டும் தலைதூக்குகின்றன.

மூலதனக் கட்டமைப்பு நெருக்கடியின் பண்புகள்

இந்த நெருக்கடிக்கு நான்கு முக்கிய பண்புகள் உள்ளன:

1. இது ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத் துறையில் மட்டும் ஏற்படும் நெருக்கடி அல்ல; நிதி, வர்த்தகம், தொழில்,வேலைவாய்ப்பு என சமூகம் முழுமையையும் பாதிக்கிறது.

2. இது ஒரு நாடு அல்லது சில நாடுகளுக்குள் மட்டுப்படக்கூடியதல்ல; உலக முதலாளித்துவ அமைப்பின் முழு கட்டமைப்பையும் பாதிக்கிறது.

3. இது வழக்கமான பொருளாதாரச் சுழற்சியைப் போல வந்து மறையும் நெருக்கடி அல்ல; தொடர்ந்து நீடிக்கும்,ஒரு வகையில் நிரந்தரமான நெருக்கடியாக மாறியுள்ளது.

4. கடந்த காலப் பொருளாதார வீழ்ச்சிகளைப் போல ஒரே நேரத்தில் வெடித்துச் சிதைவ தில்லை; மாறாக,நெருக்கடி மெதுவாகவும் தொடர்ந்து தீவிரமடைந்தும் வருகிறது.

ஹங்கேரி தத்துவவியலாளர் இஸ்ட்வான் மெஸாரோஷின் பார்வையில், ஏகபோக முதலாளித்துவம் படிப்படியாக “கேங்ஸ்டர் முதலாளித் துவம்” (Gangster Capitalism) போன்ற வடிவத்தை எடுத்துள்ளது.அதாவது, சட்டத்தின் ஆட்சியைப் பொருட்படுத்தாமல், குற்றவியல் தன்மையிலான சந்தைப் போட்டிகள்,கொள்ளை லாபம் மற்றும் வன்முறை ஆகியவற்றின் மூலம் மூலதனம் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளமுயல்கிறது. மூலதனம் சில பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் மட்டுமே குவிக்கப்படுவதால்,அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசின் சமூகக் கட்டுப்பாடுகளும் சட்டங்களும் பலவீனமடைந்துவருகின்றன. இதனால் மூலதனத்தின் நெருக்கடியைத் தீர்க்கும்பாரம்பரிய வழிமுறைகள் அனைத்தும் தொடர்ந்து பயனற்றவையாகிவிட்டன.உலகில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஏகாதிபத்திய சக்திகள் பொருளாதார, அரசியல்அழுத்தங்களுடன் இராணுவ சக்தியையும் அதிகமாகப் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக நிரந்தரப் போர் நிலை உருவாகி, அது அணு ஆயுதப் போருக்கும் உலகளாவிய சுற்றுச்சூழல் பேரழிவிற்கும் வழிவகுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிக மூலதனக் குவிப்பு, உற்பத்திதிறன் தேக்கம் மற்றும் பெருமளவிலான வீண்விரயம் ஆகியவை இன்றைய உலக முதலாளித்து வத்தின் பொதுப் பண்புகளாக மாறிவிட்டன.

“பன்முக நெருக்கடி” என்ற கருத்தாக்கமும் அதன் விமர்சனமும்

இன்றைய உலகின் பல்வேறு நெருக்கடிகளை விளக்க “Polycrisis — பன்முக நெருக்கடி” என்ற சொல் பரவலாகப்பயன்படுத்தப்படுகிறது. பொருளாதார நெருக்கடி, சுற்றுச்சூழல் நெருக்கடி, புவிசார் அரசியல் நெருக்கடி, சமூகநெருக்கடி மற்றும் தொழில்நுட்ப நெருக்கடி என்று பல்வேறு நெருக்கடிகள் ஒன்றோடொன்று தொடர்புடையதாகக்கூறப்படுகின்றன. ஆனால், இந்த அணுகுமுறை அவற்றின் அடிப்படைக் காரணமான முதலாளித்துவ உற்பத்திஉறவுகளைமூடிமறைக்கிறது.

ஆடம் டூஸ் உள்ளிட்ட சில சமூக அறிவியலா ளர்களும் உலகப் பொருளாதார அமைப்புகளும் “பன்முக நெருக்கடி”என்ற கருத்தை முன்வைப்பதற்கான காரணம் இதுதான். உலகப் பொருளாதார மன்றம், உலக வங்கி மற்றும்பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு (ஒஇசிடி) போன்ற நிறுவனங்கள் இந்த சொல்லைப்பயன்படுத்தினாலும், அவற்றை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த முரண்பாடுகள் பற்றிப்பேசுவதில்லை. உலக வங்கியின் அறிக்கையும் பன்முக நெருக்கடியை ஒரே நேரத்தில் நிகழும் ஒன்றோடொன்றுஇணைந்த நெருக்கடிகள் என்றே விளக்குகிறது; ஆனால் அங்கு மூலதனத்தின் லாப வேட்டை தான் இதற்கானகாரணம் எனக் குறிப்பிடப்படுவதில்லை. ஒஇசிடி போன்ற அமைப்புகள் “மீள்திறன்” (Resilience) என்ற கருத்தைமுன்வைத்து, முதலாளித்துவ அமைப்பின் மீது குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக தனிநபர்களே நெருக்கடிகளைச்சமாளிக்க வேண்டும் என்று கூறுகின்றன.ஃபாஸ்டரின் பார்வையில், இது நெருக்கடியின் அமைப்புசார் காரணத்தை மறைக்கும் ஒரு கருத்தியல்அணுகுமுறையாகும். பல தனித்தனி நெருக்கடிகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவற்றுக்குப் பின்னால்முதிர்ந்த ஏகபோக முதலாளித்துவத்தின் கட்டமைப்பு நெருக்கடி தான் உள்ளது. பொருளாதார மந்தநிலை, சுற்றுச்சூழல் அழிவு, போர், சமூக சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தால்ஏற்படும் வேலை இழப்பு ஆகியவை மூலதனத்தின்முடிவில்லாத குவிப்பு மற்றும் விரிவாக்கத்தின் வேட்கை ஆகியவற்றுடன் தொடர்புடையவையே ஆகும்.

தன் “மந்திரத்தைக்” கட்டுப்படுத்த முடியாத “மந்திரவாதி”

மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முதலாளித்துவத்தை, தன் சொந்த மந்திரத்தின் கட்டுப்பாட்டைஇழந்த ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடுகின்றனர். முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளை மிகப்பெரிய அளவில்வளர்த்துள்ளது; ஆனால் அது உருவாக்கிய சக்திகளைத் தானே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டது. அதிக உற்பத்தி, பொருளாதார வீழ்ச்சி, சுற்றுச்சூழல் அழிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளின்மீதான சுரண்டல் மற்றும் குடும்ப உறவுகளின் சீரழிவு ஆகிய முரண்பாடுகளை அவர்கள் முன்பே சுட்டிக்காட்டினர்.

அதே நேரத்தில், மூலதனம் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத நெருக்கடிகளை உருவாக்குவதோடு, அதற்கு எதிரான எதிர்ப்புச் சக்திகளையும் தன்னிச்சையாக உருவாக்குகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராளிகள் என பல்வேறு சமூகக் குழுக்கள் ஒன்றிணைந்து போராடும் வாய்ப்பு உருவாகிறது. மனித கண்ணியம், பொருளுள்ள வேலை, சமூக ஒற்றுமை, இயற்கைப் பாதுகாப்பு மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் போராடுகின்றனர். இதன் மூலம் ஒரு புதிய வகையான சுற்றுச்சூழல் பாட்டாளி வர்க்கம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இந்தப் புதிய சமூக சக்தி, மனித சமூகம் இயற்கையுடன் இணக்கமாக வாழும் ஒரு சுற்றுச்சூழல் நாகரிகத்தை உருவாக்குவதற்கான அடித்தளமும், சமத்துவம் மற்றும் சமூக உடைமையை அடிப்படையாகக் கொண்ட சோசலிசத்திற்கான வழியும் திறக்கப்படுகிறது.

மனிதகுலத்தின் எதிர்காலம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிடவில்லை; தற்போதைய நெருக்கடிகளைத் தனித்தனிப் பிரச்சினைகளாகப் பார்ப்பதைவிட்டுவிட்டு அவற்றின் அமைப்புசார் காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மூலதனத்தின் நெருக்கடியை ஒரு புதிய சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பமாக மாற்றுவதை காலம் நம் கையில் ஒப்படைத்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.