முந்தய பக்கம்

வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

3 Feb 2026, 4:00 pm
வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

திருவண்ணாமலை, பிப்.3-  ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்துப் பிப்.12 அன்று நடைபெற உள்ள தேசிய வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு, திருவண்ணாமலை திருமஞ்சன கோபுரத் தெருவில் உள்ள தொமுச அலுவலகத்தில் செவ்வாயன்று (பிப்.3) நடைபெற்றது.   தொ.மு.ச. பேரவை மாநிலத் துணைத்தலைவர் க.சௌந்தரராஜன் தலைமை தாங்கினார்.  தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றும் பாஜக ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெறவுள்ள அகில இந்திய வேலைநிறுத்தம் மற்றும் மறியல் தொடர்பாக அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோ சனை வழங்கினர். தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொமுச மாநிலப் பிரச்சாரச் செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம், சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.நாகராஜன், நிர்வாகிகள் கே.காங்கேயன், இரா.பாரி, முரளி, எம்.வீரபத்திரன், எம்.பாலாஜி, கமலக்கண்ணன், சரவணன், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram