முந்தய பக்கம்

திருப்பத்தூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

27 Dec 2025, 6:08 pm
திருப்பத்தூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில்  வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
<p><strong>திருப்பத்தூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் &nbsp;வேலை நிறுத்த ஆயத்த மாநாடு</strong></p> <p>திருப்பத்தூர், டிச.28- திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிபட்டு ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் உரிமை மீட்பு வேலை நிறுத்த போராட்டத்திற்கான ஆயத்த மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு நாவுக்கரசு, அருள்மொழிவர்மன் ஆகி யோர் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் வரும் ஜனவரி &nbsp;6 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் மாநில நிர்வாகிகள் ஞானசேகரன், ஜெயக்குமார், காந்திமதி நாதன், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பாண்டியன், பிரேம்குமார், &nbsp;தேசிங்கு ராஜா, &nbsp;கண்ணன், புவனேஸ்வரி, வெற்றிவேல், முரளிவாணன், பொன்னம்மாள், திலீப்குமார் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர். &nbsp;அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் இறுதியாக நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram