முந்தய பக்கம்

சென்னை துறைமுகத்தில் வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்

4 Feb 2026, 6:28 pm
சென்னை துறைமுகத்தில் வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்

சென்னை துறைமுகத்தில் வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்

சென்னை, பிப்.4- ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை கண்டித்து பிப்.12 அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.  இதனையொட்டி புதனன்று (பிப்.4) சென்னை துறைமுக வளாகத்தில் அனைத்து மத்திய சென்னை துறைமுக தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. எம்ஹச்டபுல்யுயு தலைவர் எஸ்.சீனிவாசராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில் இந்திய நீர் வழி போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் டி.நரேந்திர ராவ், மெட்ராஸ் போர்ட் அண்ட் டாக் எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வி.தமிழ்ச்செல்வன், டிடிடபுள்யுயு தலைவர் சி.ஏ.இராஜாஶ்ரீதர், எம்பிடிஇயு பொதுச்செயலாளர் சி.எம்.கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சரவணன், ஐஎன்டியுசி தலைவர் ஏ.பலராமன், பொதுச்செயலாளர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட தோழமை சங்க தலைவர்கள் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram