நியு ஆவடி சாலையில் வேலை நிறுத்த பிரச்சாரக்கூட்டம்
9 Feb 2026, 3:02 pm
<p><strong>நியு ஆவடி சாலையில் வேலை நிறுத்த பிரச்சாரக்கூட்டம்</strong></p>
<p>சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் நியூ ஆவடி ரோடு அன்னை தெரசா லோடு வேன் நிறுத்தம் திறப்பு விழா மற்றும் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற கோரி பிப்.12 அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி ஞாயிறன்று (பிப்.8) நியூ ஆவடி ரோட்டில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அன்னை தெரசா லோடு வேன் நிறுத்தத் தலைவர் இ.சம்பத்குமார் தலைமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிஐடியு மத்தியசென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே.முருகேஷ், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் எம்.உதயகுமார், பொருளாளர் எம்.முரளி, கட்டுமான சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.மார்ட்டின், நிறுத்த செயலாளர் டி.மூர்த்தி, பொருளாளர் எம்.தீபக் குமார் உள்ளிட்டோர் பேசினர்.</p>
