இணையவழி மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு நாடு முழுவதும் மருந்துக் கடைகள் முழு அடைப்பு போராட்டம்!
20 May 2026, 11:21 pm
<p><strong>இணையவழி மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு நாடு முழுவதும் மருந்துக் கடைகள் முழு அடைப்பு போராட்டம்!</strong></p><p>சென்னை, மே 20 - இணையவழியில் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையா ளர்கள் சங்கம் புதன்கிழமை (மே 20) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்த கங்கள் பங்கேற்றன. 42 ஆயிரம் கடைகள் அடைப்பு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 5,000 மருந்தகங்கள் உட்பட மாநிலம் முழுவதும் உரிமம் பெற்ற சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன. இதனால் மருந்து விநியோகம் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மருந்து விற்பனையால், இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி யுள்ளது. எனவே, மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள் மற்றும் அதிகப் படியான தள்ளுபடிகளை கட்டுப்படுத்த வேண்டும். போலி மருந்து விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக் கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்பு களை தடுக்க வேண்டும். மின்மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணை களை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் மருந்து விற்ப னையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
