தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மசூதி மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை தேவை கண்டன கூட்டத்தில் வலியுறுத்தல்

4 Nov 2026, 1:21 am
மசூதி மீது தாக்குதல் நடத்துவோர் மீது  கடும் நடவடிக்கை தேவை கண்டன கூட்டத்தில் வலியுறுத்தல்
<p><strong>மசூதி மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை தேவை கண்டன கூட்டத்தில் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, நவ. 3 -மசூதிகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவ்வாயன்று (நவ.3) கோயம்பேட்டில் கண்டன இயக்கம் நடைபெற்றது.வடபழனி மற்றும் கோயம்பேடு ஜெய்நகரில் உள்ள மசூதிகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்தான புகார்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தாலும் அவை ஏற்புடையதாக இல்லை. தாக்குதல் குறித்து திசைதிருப்பும் வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் இருந்துள்ளது.</p><p>இந்நிலையில் மசூதிகள் மீது தாக்குதல்நடத்துவோர், சமூக அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இந்த கண்டனக்கூட்டம் நடைபெற்றது.நலக்குழுவின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றஇந்தக்கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.முகமதுரஃபி, பி.கே.மூர்த்தி, மாவட்ட பொருளாளர் கே.மணிகண்டன்.சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் மாவட்டத் தலைவர் ச.லெனின் உள்ளிட்டோர் பேசினர். நீலமேகம் நன்றி கூறினார். முன்னதாக நலக்குழுவின் விருகை பகுதி தலைவர் ஏ.செல்வராஜ்வரவேற்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.