மனித சங்கிலி போராட்டம் நடத்திய சாலையோர வியாபாரிகள் கைது
17 Feb 2026, 3:36 pm
<p><strong>மனித சங்கிலி போராட்டம் நடத்திய சாலையோர வியாபாரிகள் கைது</strong></p>
<p>சென்னை, பிப்.17- என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சைனா பஜார் வியாபாரிகளுக்கு அதேஇடத்தில் வியாபாரம் செய்ய இடம் ஒதுக்ககோரி செவ்வாயன்று (பிப்.17) மனித சங்கிலி போராட்டம் நடத்திய வியாபாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையின் மிக பழமையானது சைனா பஜார். இந்தப் பகுதியில் சுமார் 400 வியாபாரிகள் பல தலைமுறையாக சாலை யோர கடையமைத்து வியா பாரம் செய்து வருகின்ற னர். இவர்களை ஆக்கிர மிப்பாளர்களாக சித்தரித்து டிச.30 அன்று மாநகராட்சி முன்னறிவிப்பின்றி கடை களை அப்புறப்படுத்தியது. சைனா பஜாரை விற்பனை செய்ய அனு மதிக்கப்பட்ட பகுதியாக (வெண்டிங் ஜோன்) அறி விக்க வேண்டும். நடை பாதையை அகலப்படுத்தி வியாபாரம் செய்துவந்த வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும். போக்குவரத்துக்கு இடை யூறாக உள்ள இருசக்கர வாகனம் மற்றும் கார் நிறுத்துமிடத்தை மாற்ற வேண்டும். காவல் துறை, மாநக ராட்சி அதிகாரிகளின் சட்ட விரோத நடவடிக்கையை கைவிட்டு சட்டப்படி வியா பாரம் செய்ய பாதுகாப்பு அளிக்க வேண்டும். நகர விற்பனை குழுவின் நோக்கத்தை சீர்குலைக்கா மல் வியாபாரிகளின் நலனை பாதுகாக்க அதன் செயல் பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி மனித சங்கிலி நடைபெற்றது. சென்னை மாநகர சிறு கடை வியாபாரிகள் சங்கங்க ளின் கூட்டமைப்பின் தலை வர் சி.திருவேட்டை தலை மையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன், பொரு ளாளர் ஸ்ரீகுமார், துணைத் தலைவர்கள் முகமது, மணிமாறன், எம்.மணி, ஜி.பூமிநாதன், அஸ்ரஃப் அலி, நகர விற்பனைக்குழு உறுப்பினர்கள் கே. பலராமன், வி.ஷாகுல் அமீது, எஸ்.பாக்கிய லட்சுமி, எஸ்.சித்ரா, சிபி எம் துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர்.குமார், மாதர் சங்க மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் வெ.தனலட்சுமி, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் லோ.விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை யடுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் எஸ்.கே.முருகேஷ் காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p>
