சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி ஆணையரிடம் மனு
25 May 2026, 11:36 pm
<p><strong>சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி ஆணையரிடம் மனு</strong></p><p>சென்னை, மே 25- 2014 ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், உடனடியாக வெண்டிங் கமிட்டி கூட்டத்தை நடத்தி துரிதமாக செயல்பட வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (மே 25) சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரனிடம் சென்னை மாநகர சிறுகடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் மனு அளித்தார் துணைத் தலைவர்கள் முஸ்தபா, முகமது, மணிமாறன், ஜி.பூமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
