பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இடம் வழங்க வேண்டும் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் கோரிக்கை
12 Mar 2026, 4:20 pm
<p><strong>பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இடம் வழங்க வேண்டும் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் கோரிக்கை</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 12- சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில், வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 30 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள், பஞ்சப்பூர் பேருந்து நிலைய சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதை தடை செய்யக்கூடாது. மத்திய பேருந்து நிலைய வளாகம் முழுவதும் பேருந்து நிலையமாகவே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சாலையோர வியாபாரிகளின் கடைகளை அகற்ற வெண்டிங் கமிட்டி கூட்டி பேசிய மாநகராட்சி நிர்வாகம், பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இடம் வழங்குவதற்கு உடனடியாக வெண்டிங் கமிட்டியை கூட்டி பேசாததையும், கடந்த 8 மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி, வியாபாரக்குழு உறுப்பினர் டி.கணேசன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் மணிமாறன், மாவட்டத் துணைத் தலைவர் சீனிவாசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். இதில், தரைகடை சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
