சாலையோர வியாபாரிகளுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை
8 Oct 2026, 1:39 am

சாலையோர வியாபாரிகளுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை

கடலூர், அக்.7-தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் கடலூரில் சம்மேளனத் தலை வர் சி.திருவேட்டை தலைமையில் நடை பெற்றது.

கூட்டத்தில், சம்மேளன பொதுச்செய லாளர் பி.கருப்பையன் பொருளாளர் எஸ்.செல்வி, சிஐடியு கடலூர் மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மாநில நிர்வாகிகள் பி.சுந்தரம், எஸ்.செந்தாமரைக் கண்ணன், எஸ்.சங்கமேஸ்வரன், எஸ்.திலகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாநகராட்சி பகுதியில் சாலை யோர வியாபாரிகளை அகற்றக்கூடாது. அவர்கள் வியாபாரம் செய்து வரும் அதே இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். மாற்று இடம் வழங்கினால், வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடமாக இருக்க வேண்டும். பழனி மலைப்பாதையில் வியா

பாரம் செய்த வியாபாரிகள் அகற்றப்பட்டு ஓராண்டாகியும் மாற்று இடம் ஒதுக்கப்பட வில்லை. உடனடியாக இடம் ஒதுக்கி தர வேண்டும்.

ராமேஸ்வரத்தில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு, 100-க்கும் மேற்பட்ட வியாபாரி களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

சென்னை பெருநகராட்சிப் பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து வரும் பகுதிகளை வெண்டிங் கமிட்டி ஒப்புதல் இன்றி வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக வியாபாரிகளுடன் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கடன் தொகையை உயர்த்தி அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் கடன் வழங்குவதுடன், இலவச காப்பீடும் வழங்க வேண்டும்.

மேலும், மழைக்காலத்தில் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்படும் சாலை யோர வியாபாரிகளுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்க ளுக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடலூரில் சாலையோர வியாபாரிகள் சம்மேளன மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.