தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெறிநாய்கள் தாக்கி 8 ஆடுகள் பலி; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

8 Jun 2026, 11:03 pm
வெறிநாய்கள் தாக்கி 8 ஆடுகள் பலி; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
<p><strong>வெறிநாய்கள் தாக்கி 8 ஆடுகள் பலி; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை</strong></p><p>நாமக்கல், ஜூன் 8- லத்துவாடி பகுதியில் வெறிநாய்கள் தாக்கியதில் 8 ஆடுகள் உயிரிழந்ததுடன், 2 ஆடுகள் படுகாயமடைந்த சம்பவம் விவசாயி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள லத்துவாடி பகுதியை சேர்ந்த சத்யா என்பவர் தனது வீட்டுப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந் நிலையில் ஞாயிறன்று இரவு 5-க்கும் மேற் பட்ட வெறிநாய்கள் ஆடுகள் அடைக்கப் பட்டிருந்த பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்தன. இதில் 8 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 2 ஆடுகள் பலத்த காயமடைந்தன. தகவலறிந்த கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த ஆடுகளுக்கு பிரேத பரி சோதனை மேற்கொண்டனர். இதே பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பும் வெறிநாய்கள் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயி ரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள் ளனர். தொடர்ச்சியாக கால்நடைகள் வெறிநாய் கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் விவ சாயிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உட னடியாக தலையிட்டு வெறிநாய்களின் நட மாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.