தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெரு நாய்கள் கடித்து 50 செம்மறி ஆடுகள் பலி

19 Jun 2026, 10:45 pm
தெரு நாய்கள் கடித்து 50 செம்மறி ஆடுகள் பலி

தெரு நாய்கள் கடித்து 50 செம்மறி ஆடுகள் பலி

திருப்பூர், ஜூன் 19- சின்னபுத்தூர் ஊராட்சிக்குட் பட்ட நடுப்பள்ளம் பகுதியில் தெரு நாய்கள் கூட்டமாக தாக்கியதில் 50 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்ப வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாரா புரம் அருகே உள்ள சின்னபுத்தூர் ஊராட்சியில் பள்ளத் தோட்டம் என்ற பகுதி உள்ளது. இந்த தோட் டத்தில் மாகாளி என்பவர் வசித்துக் கொண்டு, அந்த தோட்டத்தில் 80க்கும் மேற்பட்ட ஆடுகளை பத் தாண்டுகளாக வளர்த்து வருகி றார். வழக்கம்போல் மாகாளி வியா ழனன்று மாலை தனது பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட் டிற்கு சென்று விட்டார். காலையில் வந்து பார்த்தபோது தனது பட்டி யில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறி கொன் றுள்ளது தெரியவந்தது. பத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் தனது பட்டிக்குள் உள்ள தரம்பு கீழ் மண்ணை பறித்து உள்ளே சென்று, ஆடுகளை கடித்த 50க்கும் மேற் பட்ட ஆடுகளை கடித்துக் குதறியுள் ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 8 லட் சம் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் பத்துக்கும் மேற் பட்ட கோழிப்பண்ணைகள் செயல் பட்டு வருகின்றன. இந்த கோழி பண்ணைகளில் தினந்தோறும் இறக்கும் கோழிகளை சாலையோ ரத்தில் பண்ணை உரிமையாளர் கள் வீசி செல்வதால் வெறிநாய்கள் சாலையோரத்தில் இறந்து கிடக் கும் கோழிகளை தின்றுவிட்டு, அவற்றுக்கு உணவு கிடைக்காமல் இருக்கும்போது அருகில் உள்ள பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கொன்று வருவதாக வேதனையு டன் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தாராபுரம் தாசில் தார் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை மேற்கொண்டனர். தெரு நாய்கள் கடித்து 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்து இருக்கும் நிலையில் ஆடு வளர்க்கும் விவசா யிகள் வேதனையடைந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.