தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொடரும் துயரம்: வெறிநாய்கள் கடித்து 30 ஆடுகள் இறப்பு

30 May 2026, 11:56 pm
தொடரும் துயரம்: வெறிநாய்கள் கடித்து 30 ஆடுகள் இறப்பு
<p><strong>தொடரும் துயரம்: வெறிநாய்கள் கடித்து 30 ஆடுகள் இறப்பு</strong></p><p>திருப்பூர், மே 30- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் வெவ்வேறு இடங்களில் வெறி நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரி ழந்தன. தொடர்கதையாகி வரும் இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரை சந் தித்து, விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு கிடைக்க நிரந் தர அரசாணை பிறப்பிக்க வேண் டும் என்று வலியுறுத்தினர். திருப்பூர் மாவட்டம், வெள்ளக் கோவில், சிவனாதபுரம் மேற்குத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குணசேகர். இவரது தோட்டத்தில் 80 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த வெள்ளியன்று அதிகாலை அவர் தோட்டத்தில் புகுந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 16 செம்மறி ஆடுகள் இறந்துவிட்டன. இதேபோல், முத லிபாளையம் ஊராட்சி, கெங்க நாயக்கன்பாளையத்தில் சரஸ்வதி என்பவர் மிகவும் வறிய நிலையில் ஆடுகள் வளர்த்து வாழ்ந்து வந்தார். அவரது பட்டியில் அடைக்கப்பட்டி ருந்த ஆடுகளை சனியன்று அதி காலை தெரு நாய்கள் கடித்துக் குதறி கொன்றன. இவர் வளர்த்து வந்த மொத்தம் 18 செம்மறி ஆடு களில், வெறி நாய்களால் கடிக்கப் பட்ட 10 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் பல ஆடுகள் தெரு நாய்க ளிடம் கடிபட்டு உயிருக்கு போராடி வருகின்றன. இத்துடன் அரசூர் வடக்கு பகுதிகளில் வெள்ளியன்று இரண்டு மாட்டுக்கன்றுகள் வெறி நாய் கூட்டத்திற்கு பலியாகிவிட டன. திருப்பூர் மாவட்டத்தில் தெரு நாய்கள் கடித்து அடுத்தடுத்து இரண்டு நாட்களில் 30க்கும் மேற் பட்ட ஆடுகள் இரண்டு கன்று குட்டி கள் இறந்த சம்பவம் விவசாயிகளி டம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ஆடுகளை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகள் தீர்மானித்தனர். இதனிடையே காவல்துறையினர், அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரி ழந்த கால்நடைகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த னர். இந்த சூழ்நிலையில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி, திருப்பூர் மாவட் டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற் றார். பாதிக்கப்பட்ட விவசாயிகள், அவிநாசிக்கு சென்று அமைச்சர் கமலியை நேரில் சந்தித்து, தெரு நாய்களால் வளர்ப்பு கால்நடைகள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங் கள் குறித்து தெரிவித்து, அவற் றுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியு றுத்தி கேட்டுக்கொண்டனர். மேலும், உயிரிழக்கும் கால் நடைகளுக்கு சந்தை மதிப்பில் விவ சாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்ததை சுட்டிக்காட்டினர். இதன் தொடர்ச்சியாக முந்தைய அரசு தெரு நாய்களால் உயிரிழந்த கால் நடைகளுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்தது. இரண்டு தவணைகளாக இழப் பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டது. எனினும் தெரு நாய்கள் கால்நடை களை கடித்துக்கொல்லும் பிரச் சனை தொடர்ந்து வருவதால், உயி ரிழக்கும் கால்நடைகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண் டும். அதற்கு நிரந்தர அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கை களை கேட்டறிந்த அமைச்சர் கமலி, இப் பிரச்சனை குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும், விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிய ளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.