தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெரு நாய்கள் தாக்குதலில் 13 ஆடுகள் பலி: சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

7 May 2026, 12:44 am
தெரு நாய்கள் தாக்குதலில் 13 ஆடுகள் பலி:  சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

தெரு நாய்கள் தாக்குதலில் 13 ஆடுகள் பலி: சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருப்பூர், மே 6- மூலனூர் மற்றும் காங்கேயம் அருகே தெருநாய்கள் கடித்து 13 ஆடுகள் உயிரிழந்த நிலையில், சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வரு கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், காங் கேயம் வட்டம் வீரணம்பாளையம் கிராமத்தில் செல்லமுத்து என்பவ ரது தோட்டத்தில் புதன்கிழமை அதி காலை 5 ஆடுகளை நாய் கடித்து இறந்துவிட்டது.

மேலும், மூல னூரில் விவசாயி ஒருவரின் தோட் டத்தில் 20 ஆடுகளை வெறிநாய் கள் கடித்துக் குதறின.

இதில் எட்டு ஆடுகள் இறந்துவிட்டன. தொடர்ச் சியாக பெருகிய தெரு நாய்களால் கால்நடைகளை தாக்கி விவசாயி களுக்கு வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை பொருளாதாரம் நலி வடைகிறது என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை முன்னெ டுத்தும் கடந்த காலங்களில் அர சாணை இருமுறை வெளியிடப் பட்டு இறந்த ஆடுகளுக்கு வயதிற் கேற்ப அதிகபட்சம் 6 ஆயிரம் ரூபாய் முதல் தடவையாக வழங் கப்பட்டது

. பின்பு, இரண்டாவது அர சாணை வெளியிடப்பட்டு தொகை இன்னும் நிலுவையில் உள்ளது.

இச்சூழ்நிலையில் விவசாயிகள் தங்களது கீழ்க்கண்ட கோரிக் கையை உடனடியாக காலதாமதம் இன்றி நிறைவேற்றித் தருமாறு கோரியுள்ளனர். இறந்த ஆட்டிற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

இழப் பீட்டுத் தொகையானது காலதாம தம் இன்றி உடனடியாக வழங்கப் பட வேண்டும்

. அதுவும் நிரந்தர நிதி யிலிருந்து வழங்க வேண்டும். இன்றைய தேதி வரை நிலுவையில் உள்ள அனைத்து தொகையும் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத் தினர்.

இந்நிலையில் வீரணம்பாளை யத்தில் இறந்த ஆடுகளை கால் நடை மருத்துவத்துறை மருத்துவர் கள் கூராய்வு செய்தனர்.

விவசாயி களின் கோரிக்கை குறித்து கால் நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ஆர். சந்திரன் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார்.

இதில், திருப் பூர் மாவட்டத்தில் உள்ள காங் கேயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை பல்லடம் அவி நாசி மற்றும் ஊத்துக்குளி ஆகிய வட்டங்களில் உள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருக்கும் நிலையில் தெரு நாய் கள் கடித்து வளர்ப்பு கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.

இந்த கால் நடைகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை முதலமைச்சர் பொது நிவா ரண நிதியில் இருந்து முதல் கட்ட மாக ரூ.14 லட்சத்து 97 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு அளிக் கப்பட்டுள்ளது.

இத்துடன் இரண்டாவது கட்ட மாக ரூ. 38 லட்சத்து 32 ஆயிரத்து 200 வழங்கப் பட்டுள்ளது.

தற் போது கால்நடை களை இழந்த விவசாயிகள் வங்கி கணக்கு விபரம் சேகரிக் கப்பட்டு வருகி றது.

மாவட்ட ஆட்சியர் மூலம் இவர்களுக்கு வங்கிக் கணக்கு களில் இழப்பீட் டுத் தொகை வரவு வைக்கப் படும்.

மேலும் நடப்பு மாதங் களில் தெரு நாய் களால் உயிரிழக் கும் கால்நடைகள் குறித்து விபரங் கள் சேகரிக்கப்பட்டு அவற்றிற்கும் இழப்பீடு பெற்று தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை மண் டல இணை இயக்குனர் தெரிவித் துள்ளார்.

அதேசமயம் தற்போது நிர் ணயிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு போது மானதல்ல.

எனவே கால்நடைக ளின் சந்தை மதிப்புக்கு உரிய இழப் பீட்டுத் தொகையை வழங்க வேண் டும் என்றும் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.