முந்தய பக்கம்

சிறுவனை கடிக்க துரத்திய தெருநாய்கள்

22 Mar 2026, 4:19 pm
சிறுவனை கடிக்க துரத்திய தெருநாய்கள்
<p><strong>சிறுவனை கடிக்க துரத்திய தெருநாய்கள்</strong></p> <p>நாமக்கல், மார்ச் 22- ராசிபுரத்தில் 10 வயது சிறுவனை மூன்று &nbsp;தெரு நாய்கள் கடிக்க துரத்திய கண்காணிப்பு &nbsp;கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள் ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், திருவிக தெருவை சேர்ந்தவர் அதிமித்ரன் (10). தனி யார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் &nbsp;இந்த சிறுவனின் தாய் கனரா வங்கி ஊழியர். &nbsp;தந்தை அதே தெருவில் கணினி மையம் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளி யன்று, வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்கு &nbsp;பொருள் வாங்க சென்று, திரும்பும் போது, &nbsp;அங்கே படுத்திருந்த மூன்று தெருநாய்கள் &nbsp;சிறுவனை அதிவேகமாக கடிக்க துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்து ஓடிய சிறுவனுக்கு கீழே விழுந்து கை கால்கள் தலையென பலத்த காயம் ஏற்பட்டது. அதிவேகமாக ஓடியதால் நாயிடம் கடிபடாமல் தப்பிய சிறு வனின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற் போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தெருநாய்கள் பிரச்சனை குறித்து &nbsp;ராசிபுரம் நகராட்சியில் பலமுறை புகாரளித் தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தி, நாய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram