கடலூரில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
27 Nov 2025, 3:11 pm
<p>கடலூர், நவ.27- தென்கிழக்கு இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை ,கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி ,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய 2 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.</p>
