புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை அரசியல் மேடையாகப் பயன்படுத்துவதைத் தடுத்திடுக! தலைமை தேர்தல் ஆணையரிடம் சிபிஎம் வலியுறுத்தல்
26 Feb 2026, 5:09 pm
<p><strong>புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை அரசியல் மேடையாகப் பயன்படுத்துவதைத் தடுத்திடுக! தலைமை தேர்தல் ஆணையரிடம் சிபிஎம் வலியுறுத்தல்</strong></p>
<p>புதுச்சேரி, பிப்.26- புதுச்சேரி ராஜ் நிவாஸ் பா.ஜ.க-வின் அரசியல் மேடையாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை யொட்டி தலைமை தேர்தல் ஆணை யர் ஞானேஷ் குமார் தலைமை யிலான தேர்தல் ஆணையத்தின் முழுமையான கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பி னர் ஜி. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு, சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல் அட்டவணை மற்றும் நலத்திட்டங்கள்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிற்கான சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்து வது பொருத்தமாக இருக்கும். ஐந்து மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தல்களையும் குறுகிய கால இடைவெளியில் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தல் விதிமுறை களைக் காரணம் காட்டி, ஏழை எளிய மக்களுக்கான தொடர் நலத்திட்டங்களை நிறுத்தும் நடை முறையைக் கைவிட வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்குரிமை மறுப்பு சிறப்புச் சுருக்கமுறை திருத்தம் என்ற பெயரில் இந்திய மக்களின் இறையாண்மையை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையமே மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. அக்டோபர் 2025 வரை புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் இருந்தனர். தீவிர திருத்தம் என்ற பெயரில் 1,20,086 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; ஆனால் வெறும் 42,719 புதிய வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, 2026 பிப்ரவரி இறுதிப் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 9,44,211 ஆகக் குறைந்துள்ளது. வழக்கமாக 2 முதல் 3 ஆண்டுகள் வரை நடைபெறும் இந்தத் திருத்தப் பணி, தற்போது அவசரகதியில் 2 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. தகுந்த காரண மின்றி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும். வேறு இடங்களில் வாக்கு ரிமை பெற்றுள்ள புலம்பெயர்ந்த மக்களுக்குப் புதுச்சேரியிலும் வாக்குரிமை அளிப்பது ‘இரட்டை வாக்குரிமைக்கு’ வழிவகுக்கும். ஆளும் கட்சியின் தேர்தல் விதிமீறல்கள் புதுச்சேரியில் ஆளும் கூட்டணி யில் உள்ள பா.ஜ.க, ஒன்றிய அரசின் ஆதரவுடன் தேர்தல் விதி களை அப்பட்டமாக மீறி வருகிறது. கடந்த 6 மாதங்களாக 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மிக்ஸி, கிரைண்டர், குக்கர் போன்ற இலவசப் பொருட்களுக்கான டோக்கன்கள் தாராளமாக விநி யோகிக்கப்படுகின்றன. இந்த முறைகேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இத்தகைய செலவுகளைக் கண்காணித்து, அவற்றைச் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும். 2021 தேர்தல் புகார்கள் மீதான நடவடிக்கையின்மை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் உரிய ஆதாரங்களுடன் அளிக்கப்பட்ட புகார்கள் மீது இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. பா.ஜ.க சட்டவிரோதமாக வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊசுடு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சாய் சரவணன் நள்ளிர வில் பணத்துடன் பிடிபட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படாத தால், அவர் வெற்றி பெற்று அமைச்சராகி தற்போது மீண்டும் போட்டியிடத் தயாராகி வருகிறார். பெரியார் நகரில் கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி பணம் மற்றும் ஏம்பலம், நெட்டப்பாக்கம் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான செட்-டாப் பாக்ஸ்கள் விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. திரு நள்ளாறு தொகுதியில் பிரதமர் மோடியின் படம் பொறிக்கப்பட்ட 149 தங்கக் காசுகள் மற்றும் வாக்காளர்களுக்கான பணத்துடன் பிடிபட்ட பா.ஜ.க வேட்பாளர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துணைநிலை ஆளுநர் மாளிகை தலையீடு: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, எந்தவொரு புதிய திட்டங்களுக்கும் ராஜ் நிவாஸ் ஒப்புதல் அளிக்கக் கூடாது. மக்கள் குறைகேட்பு என்ற பெயரில் நேரடியாக கிராமங்களுக்குச் சென்று வாக்குறுதிகள் அளிப்ப தைத் தவிர்க்க வேண்டும். ராஜ் நிவாஸ் பா.ஜ.கவின் அரசியல் மேடையாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நேரடியாகத் தலையிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
