முந்தய பக்கம்

ஈரானுக்கு எதிரான போரை நிறுத்து! திருப்பூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

6 Mar 2026, 3:17 pm
ஈரானுக்கு எதிரான போரை நிறுத்து!  திருப்பூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்
<p><strong>ஈரானுக்கு எதிரான போரை நிறுத்து! &nbsp;திருப்பூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 6- ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம், இன வெறி &nbsp;பிடித்த இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான போரை நிறுத்த வலியுறுத்தி திருப்பூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. &nbsp;திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகம் முன்பு வெள்ளியன்று மாலை நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு பாத்திரத் தொழிலாளர் சங்க செயலாளர் குபேந் திரன் தலைமை வகித்தார். இதில் ஏகாதிபத்திய &nbsp;அமெரிக்கா, &nbsp;இஸ்ரேலின் யுத்த நடவடிக்கையை கண்டித்தும், போரை நிறுத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. &nbsp;இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலா ளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி, தமிழ் நாடு &nbsp;கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன பொதுச் &nbsp;செயலாளர் டி. குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் &nbsp;கே.ரங்கராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சிஐ டியு சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram