தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடைகளை அகற்றும் நடவடிக்கையை கைவிடுக! தரைக்கடை வியாபாரிகள் சாலை மறியல்

1 Dec 2025, 5:20 pm
கடைகளை அகற்றும் நடவடிக்கையை கைவிடுக! தரைக்கடை வியாபாரிகள் சாலை மறியல்
<p><strong>கடைகளை அகற்றும் நடவடிக்கையை கைவிடுக! தரைக்கடை வியாபாரிகள் சாலை மறியல்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, டிச.1- &nbsp;திருச்சி மெயின் கார்டு கேட், என்.எஸ்.பி. ரோடு தரைக்கடை வியாபாரிகள் நூறு பேர், திங்கட்கிழமை தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அஸ்ரப் அலி, ஜீவா, அன்சாரி, செந்தில், கபீர் அகமது, லதா ஆகியோர் தலைமையில், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியை சந்தித்து, தனித்தனியே மனு கொடுத்தனர். &nbsp;அந்த மனுவில் கூறியிருப்பதாவது: &nbsp;என்.எஸ்.பி ரோடு, மெயின் கார்டு கேட் பகுதியில் நாங்கள் 10 முதல் 40 வருடங்களாக சட்டப்படி அமைதியாக, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் தரைக்கடை வியாபாரம் செய்து வருகிறோம். எங்கள் வாழ்வாதாரம் முழுவதும் இந்த வியாபாரத்தை மட்டுமே வைத்து நடைபெற்று வருகிறது. &nbsp;ஆனால் சமீபத்தில் அதிகாரிகள், தரைக்கடை வியாபாரிகளின் இசைவு இல்லாமலும், எந்த விசாரணை இல்லாமலும் தரைக் கடைகளை காலி செய்ய கூறி, தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சட்ட விதிகளுக்கு புறம்பாக தரைக்கடை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கையை நிறுத்தி, விசாரணை நடத்தி, எங்களுக்கு எந்த இன்னல்களும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்ட பாதுகாப்பு வழங்கிட உத்தரவிட வேண்டும். &nbsp;இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. &nbsp;இதேபோல் தரைக்கடை வியாபாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், வருவாய் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், திருச்சி மாநகராட்சி வெண்டிங் கமிட்டி தலைவர் ஆகியோரை சந்தித்தும் மனு கொடுத்தனர். இந்நிலையில் ஆட்சியர் சரவணனை சந்தித்து மனு கொடுக்க தரைக்கடை வியாபாரிகள், திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது, காவல்துறையினர் மொத்தமாக செல்ல அனுமதிக்க முடியாது என்றும், பிரதிநிதிகள் மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்குமாறும் கூறினர். &nbsp;இதையடுத்து, தரைக்கடை வியாபாரி களை உள்ளே அனுமதிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஆட்சியரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினர். மொத்தமாக செல்ல அனுமதி மறுக்கப்பட்ட தால், நூற்றுக்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள், திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தரைக்கடை வியாபாரிகளுடன் காவல்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிது நேரத்திற்குப் பின் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகளை முறையிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.