தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளை நிலங்களில் மின்வேலி அமைப்பது தடுத்து நிறுத்தம்

27 Mar 2026, 3:15 pm
விளை நிலங்களில் மின்வேலி அமைப்பது தடுத்து நிறுத்தம்
<p><strong>விளை நிலங்களில் மின்வேலி அமைப்பது தடுத்து நிறுத்தம்</strong></p> <p>தருமபுரி, மார்ச் 27- &nbsp;பென்னாகரம் அருகே விளை நிலங்களில் மின்வேலி அமைக்கும் வனத்துறையின் முயற்சியை தடுத்து நிறுத்திய தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர், அப்பகுதி விவசாயிகளில் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும் என வலியுறுத்தியுள் ளனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், பிக்கிலி ஊராட்சிக் குட்பட்ட சின்னாற்றங்கரையில் தட் டப்பள்ளம் என்ற பகுதி உள்ளது. இது பாலக்கோடு வனச்சரகம், பிக் கிலி வனப்பகுதியை ஒட்டி அமைந் துள்ளது. வனப்பகுதியையொட்டி விளை நிலங்கள் மற்றும் கிராமத் துக்குள் யானைகள் நுழைவதை கட்டுப்படுத்த வனத்தைச்சுற்றி அக ழிகள் தோண்டப்பட்டுள்ளது. தற் பொழுது வனப்பகுதியை ஒட்டி சோலார் மின் வேலி அமைக்கும் பணியினை வனத்துறையினர் செய்து வருகின்றனர். ஏற்கனவே வனப்பகுதியிலுள்ள அகழிகள் இருக்கும் பகுதியில் இருந்து சுமார் 500 அடி தொலைவுக்கு விலை நிலங்களில் சோலார் மின் வேலி அமைப்பதற்கான கம்பங்களை நட்டு வருகின்றனர். இதனால் அப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்க ளின் அனுபவ நிலங்களில் உள்ள &nbsp;தென்னை, புளியமரம், முருங்கை, &nbsp;எலுமிச்சை உள்ளிட்ட மரங்க,ள் விளை நிலங்களையும் சேர்த்து சோலார் மின் வேலி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில், பாலக்கோடு சரக வனத்துறையினர் தட்டப்பள் ளம் பகுதியில் மின் வேலி அமைக்க வந்திருந்தனர். தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்ட துணைச்செய லாளர் டி.ஆர்.சின்னசாமி, தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டி.சின்னசாமி ஆகியோருடன் அப்பகுதி கிராம மக்கள் மின் வேலி அமைப்பதை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச் சுனன் கூறுகையில், தட்டப்பள்ளம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த இருளர் பழங்குடி மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பல தலைமுறைகளாக கரடு முர டாக இருந்த நிலத்தை சமன்ப டுத்தி, கிணறு வெட்டி பம்ப் செட் &nbsp;மோட்டார் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். விளைநிலங் களுக்கு அருகே மூதாதையர்கள் வழிபட்ட கோவில்களும், நினை விடங்களும் உள்ளன. சிறு குறு விவசாயம் செய்து வரும் இவர்கள், நிலத்தில் விளையும் பொருட்களை வைத்து வாழ்க்கை நடத்தி வரு கின்றனர். ஆனால், விளை நிலங் களை சேர்த்து மின் வேலி அமைத் தால் அந்த விவசாயிகளின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகும். எனவே, விளைநிலங்களை தவிர்த்து மின் வேலி அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.