தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரத்தூரில் ஏர்டெல் டவரை தடுத்து நிறுத்துக! விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

13 Nov 2025, 3:30 pm
ஒரத்தூரில் ஏர்டெல் டவரை தடுத்து நிறுத்துக!  விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஒரத்தூரில் ஏர்டெல் டவரை தடுத்து நிறுத்துக! &nbsp;விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>விழுப்புரம், நவ.12- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஓரத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் வாழும் பகுதியில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மின் கோபுரம் புதியதாக அமைப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி வியாழக்கிழமை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரத்தூர் கிராமத்தில் சுமார் 10 &nbsp;ஆண்டுகளுக்கு முன் &nbsp;மின் கோபுரம் அமைக்கப்பட்டது. அதில் அதிக சக்தி வாய்ந்த மின் கசிவு ஏற்பட்டு ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள கறவை மாடு இறந்து விட்டது. மாட்டின் உரிமையாளரும் மின்கசி வால் பாதிக்கப்பட்டுள்ளார் அருகில் உள்ள பொதுமக்களும் அச்சத்தின் பிடியில் வாழ்ந்து வருகிறார்கள். மீண்டும் ஊரின் மையப்பகுதியில் &nbsp;மின் கோபுரம் அமைப்ப தற்கு முயன்று வருகின்றனர். &nbsp;தடுக்க கடந்த 4ஆம் தேதியன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை தலையீட்டால் நிறுத்தப்பட்டது. மீண்டும், மீண்டும் &nbsp;மின் கோபுரம் அமைக்க முயல்கிறார்கள், புதியதாக அமைக்கும் &nbsp;மின் கோபுரத்தை &nbsp;தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பொது மக்கள் சார்பில் சேர்ந்து ஒரத்தூர் கிராம விஏஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் பி.கலிய மூர்த்தி தலைமை தாங்கினார், மாவட்டச் செய லாளர் கே.சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஜெ.மான்விழி, கே.தாட்சயணி,டி.தமிழ்ச்செல்வி, டி.காந்தா மணி,ஜெ.மேரிசாந்தகுமார், வட்டத் தலை வர் எம்.சேகர், மாவட்ட குழு எஸ்.அமுதா, நகர தலைவர் பி.பால்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்..</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.