மாடம்பாக்கம், செம்பாக்கம் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
29 Sept 2026, 2:23 am

மாடம்பாக்கம், செம்பாக்கம் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

சென்னை, செப். 28 –மாடம்பாக்கம், செம்பாக்கம் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று சுற்றுச் சுழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் வலி யுறுத்திஉள்ளது.

சங்கத்தின் ஆண்டுப்பேரவை ஞாயிறன்று (செப்.28) குரோம்பேட்டை யில் நடை பெற்றது. இந்தப்பேரவையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும். மாடம்பாக்கம், செம்பாக்கம் ஏரிகளில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும். நன்மங்க லம் ஏரியை பாதுகாக்க வேண்டும்.

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினி யோகத்தை தனியாரிடம் கொடுப்பதை கைவிட்டு, மாநகராட்சி நிர்வாகமே முழுமையாக விநியோகம் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை துரித

மாக நிறைவேற்றவேண்டும்.

தொழிற்சாலைகள், வணிக, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு நிலை யங்களை அமைக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பு முறையை செயல்படுத்திட வேண்டும். ஏரிகள் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி பராமறிக்க வேண்டும்.

பச்சமலை பகுதியில் இருந்து வரும் வரத்து கால்வாய்களை தூர்வாரி, மழை வெள்ளத்தை பள்ளிக் கரணை சதுப்பு நிலத்தில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பெருங்க ளத்தூர் பகுதி ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆண்டுப் பேரவைக்கு சங்கத்தின் தலைவர் எஸ்.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். அஞ்சலி தீர்மானத்தை துணைத் தலைவர் ஏ.ஜி. ஜெயவேலு வாசித்தார். துணைத் தலைவர் எம்.காதர் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை செயலாளர் எம். தங்கராஜ், வரவு செலவு அறிக்கையை பொரு

ளாளர் கே. பாஸ்கர் ஆகி யோர் சமர்ப்பித்தனர். சுற்றுச் சூழல் ஆர்வலர் டி.சுந்தர்ராஜன் நிறைவு ரையாற்றினார். துணைத் தலைவர் எஸ்.சுந்தர பாண்டியன் நன்றி கூறினார்.