துறைமுக மருத்துவமனைகளைத் தனியாரிடம் கொடுப்பதைக் கைவிடுக!
4 Oct 2026, 10:19 pm

துறைமுக மருத்துவமனைகளைத் தனியாரிடம் கொடுப்பதைக் கைவிடுக!

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும் சிஐடியு அகில இந்தியத் தலைவர்களில் ஒருவருமான தபன்சென் உரையாற்றினார்.

சி.டி.நந்தகுமார், டி. நரேந்திரன், ஏ. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, அக்.4 -நாட்டில் உள்ள துறைமுகங்களுக்குச் சொந்தமான மருத்துவமனை களைத் தனியாரிடம் கொடுப் பதைக் கைவிட வேண்டும் என்று அகில இந்திய நீர்வழிப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) மாநாடு வலியுறுத்தியுள்ளது. சென்னையில் அக்டோபர் 2, 3 ஆகிய தேதிகளில்நடைபெற்ற இம்மாநாட்டில்பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

துறைமுக மருத்துவமனைகள் பொதுத்துறையிலேயே நீடிக்க வேண்டும்முக்கியத் துறைமுக மருத்துவமனைகளைத் தனியாரிடமோ அரசு-தனியார் கூட்டு ஏற்பாட்டிற்கோ மாற்றாமல், அந்தந்தத் துறைமுக அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயேதொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும், மருத்துவவசதிகள், போதுமான பணியாளர்கள், மருந்துகள், நோயறிதல், சிறப்புச் சேவை களுடன் நவீனமயமாக்க வேண்டும் எனவும் மாநாடுகோரியது. ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அனுபவிக்கும் மருத்துவச் சலு கைகள் குறைக்கப்படவோ நீர்த்துப்போகச் செய்யப்படவோ கூடாது எனவும், மருத்துவச் சேவை களைப் பாதிக்கும் முடிவெடுப்பதற்கு முன் துறைமுக அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்கள், ஓய்வூதியதாரர் பிரதிநிதிகளுடன் அர்த்த முள்ள கலந்தாலோசனை நடத்தவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாலுமிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!

பாரசீக வளைகுடா, கருங்கடல், செங்கடல் பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள், மாலுமிகள் மீதான தாக்குதல்களை — தாக்குபவர் யாராக இருந்தாலும் — உடனடியாக நிறுத்தி, அப்பாவி மாலுமிகள் கொல்லப்படுவதைத்தடுத்து, சிக்கித் தவிக்கும் மாலுமிக் குழுவினரைப் பாதுகாப்பாகத் தாயகம் அனுப்ப வேண்டும் என மாநாடுவலியுறுத்தியது. பந்தர் அப்பாஸ், பந்தர்-இ இமாம் கொமேனி, கோர்ரம்ஷாஹர், கோர்ஃபக்கான் ஆகிய இடங் களில் படகுகளிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்ட மாலுமிகளுக்கு உரியஊதியங்களை முழுமையாக அளித்துத் தாயகம் அனுப்ப வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மாலுமிகள், அவர்தம் குடும்பத்தினரின்பாதுகாப்பு, ஊதியம், இழப்பீடு ஆகியவற்றை ஒன்றிய அரசு, சர்வதேச கடல்சார் அமைப்பு, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு உறுதி செய்யவேண்டும் எனவும் கோரப்பட்டது.

காமராஜர் துறைமுகம், கிரேட் நிக்கோபார் திட்டம்

2027 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய ஊதிய ஒப்பந்தத்தின் பலன்களை, முக்கியத் துறைமுகங்களில் நேரடியாகவோ ஒப்பந்தக்காரர்கள்/ஆள்வழங்கல் முகமைகள் மூலமாகவோ பணியமர்த்தப்பட்ட தகுதியுள்ள அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. சென்னைத் துறைமுக ஆணையத்திற்கு முழுச் சொந்தமான காமராஜர் துறைமுக லிமிடெட்டில் 10 சதவீதப் பங்குகளைப் பங்குச் சந்தை மூலம் விற்கும் முதலீட்டு விலக்கல் கொள்கையைக் கைவிட்டு, அதை முழுமையாகப் பொதுத்துறையின் கீழ் இயக்க வேண்டும் எனவும், 2021 முக்கியத் துறைமுக அதிகார சபைகள் சட்டத்தின் கீழ் நிர்வாகம் சிறப்பாக நடைபெறும் நிலையில், அனைத்துத் தொழிலாளர் கூட்டமைப்புகளுடன் கலந்தாலோசித்து மறு ஆய்வு முடியும் வரை முன்மொழியப்பட்ட பெருநிறுவனமயமாக்கல், பட்டியலிடும் செயல்முறையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. கிரேட் நிக்கோபார் தீவின் கலாத்தியா வளைகுடாவில் முன்மொழியப்பட்ட சர்வதேசக் கொள்கலன் மாற்று முனையத் திட்டத்திற்கு மாநாடு கண்டசுதந்திரமான மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனக் கோரியது.

நிர்வாகிகள் தேர்வு

சம்மேளனத் தலைவர் சி.டி. நந்தகுமார் தலைமை தாங்கினார்; வரவேற்புக் குழுத் தலைவரும் மெட்ராஸ் போர்ட் அண்ட் டாக் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவருமான அ. சவுந்தரராசன் வரவேற்றார்; சம்மேளனச் செயலாளர் ஆர். ரசல் அஞ்சலித் தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு பொதுச் செயலாளர் எளமரம் கரீம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்; பொதுச் செயலாளர் அறிக்கையை டி. நரேந்திரனும், வரவு செலவு அறிக்கையை ஏ. கிருஷ்ணமூர்த்தியும் சமர்ப்பித்தனர். சிஐடியு அகில இந்தியச் செயலாளர் ஆர். கருமலையான் வாழ்த்திப் பேசினார்.

பூஷன் பாட்டீல் (மும்பை), பிமன் மிஸ்திரி, சமரேந்திர மண்டல் (கொல்கத்தா), உலாஸ் சுவைன், கே.சி. சுதர் (பரதீப்),பயாஸ் அகமது கான், கே. சத்யநாராயணா (விசாகப்பட்டினம்), ஜெகன் (கங்காவரம்) ஆகியோரும் பேசினர். மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும் சிஐடியு அகில இந்தியத் தலைவர்களில் ஒருவருமான தபன்சென் மாநாட்டை நிறைவு செய்தார்; சம்மேளனச் செயலாளர் வி. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகளாகத் தலைவர் - சி.டி. நந்தகுமார், பொதுச் செயலாளர் - டி. நரேந்திரன், பொருளாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.