தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டவிரோத தண்ணீர் திருட்டை தடுத்திடுக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

7 hours before
சட்டவிரோத தண்ணீர் திருட்டை தடுத்திடுக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சட்டவிரோத தண்ணீர் திருட்டை தடுத்திடுக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

உடுமலை, செப்.3-அமராவதி அணையில் இருந்து ஆற்விடப்படும் தண்ணீரை சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தவிச மடத்துக்குளம் தாலுகா செயலாளர் வீரப்பன், திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கையில், தற்போது பருவமழை போதிய அளவில் பெய்யாததால் பல்வேறு பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயத்திற்கும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் நீராதாரங்களை பாதுகாப்பது மிகவும் அவசியமாகியுள்ளது. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அமராவதி அணையின் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன.

இதுதவிர, அமராவதி ஆற்றை சார்ந்துள்ள பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும்அணையின் நீர் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போதைய சூழலில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அமராவதிஅணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆற்றின் பல்வேறு பகுதிகளில் சிலர் மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகளும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, வறட்சி நிலவும் நிலையில், குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சி எடுப்பதால், ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் குடிநீர் தேவையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல், எதிர்காலத்தில் பாசனத்திற்கான தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகலாம்.

எனவே, அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு, சட்டவிரோதமாக மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் பாசனத் தேவைக்கும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் அமராவதி நீர் முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.