ஏழைகளின் வீடுகளை இடிப்பதை நிறுத்திடுக!' வி.ச. வலியுறுத்தல் வி.ச. வலியுறுத்தல்
18 Aug 2026, 9:24 pm

ஏழைகளின் வீடுகளை இடிப்பதை நிறுத்திடுக!' வி.ச. வலியுறுத்தல்

வி.ச. வலியுறுத்தல்

தேனி, ஆக.18–தேனி வாசுகி காலனியில் உள்ள 8 ஏழைகளின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என வன விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.தேனி மாவட்ட விவசாயிகளுக்கான வனத்துறை குறைதீர்க்கும் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பக அலுவலகத்தில், துணை இயக்குநர் விவேக்குமார் பி.யாதவ், மாவட்ட வன அலுவலர் ஜி.கிரண்

ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் டி.கண்ணன் பேசியதாவது:தேனி நகராட்சி கருவேல்நாயக்கன் பட்டியில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் நீண்டகாலமாக குடியிருந்து வருபவர்களை வெளியேற்ற வனத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது வன உரிமைச் சட்டத்துக்கு எதிரானது. சாலை, கோயில் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கிய வனத்துறை, அங்கு வசிப்பவர்களுக்கு பட்டாவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற் றப்பட்ட சட்டங்களை அமல்படுத்தும் வனத் துறை, 2006-ஆம் ஆண்டு வனஉரிமைச் சட்டத்தை கண்டுகொள்வதில்லை. வருவாய்த்துறையினரும் மாற்று இடம் வழங்க முன்வரவில்லை.கோடை காலத்தில் குடிநீர் வசதி இல்லாததால் வனவிலங்குகள் விவசாய நிலங்களை நோக்கி வருகின்றன. வன விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்பதை வனத்துறைஉறுதி செய்ய வேண்டும் என்றார்.

மலை கிராமங்களுக்கு பட்டாதேனி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் பாண்டியன் பேசுகையில், 2015-ஆம் ஆண்டு மலை கிராமங்களில் தமிழ்நாடு எஸ்டேட் ஒழிப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ரயத்துவாரி பட்டா வழங்கக்கோரி அப்பதைய ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டதாகவும், அந்த மனு முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என் றும் தெரிவித்தார். மேகமலை, அகமலை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றார்.காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபிநாத் பேசுகையில், 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவர்களைவெளியேற்றும் முடிவு சரியல்ல. அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றார்.மேய்ச்சல் உரிமைமலை மாடு வளர்ப்போர் சங்கத் தலைவர் கென்னடி பேசுகையில், வன உரிமைச் சட்டப்படி மாடுகளை மேய்க்க உரிமை உள்ளது என்றும், பலதலைமுறைகளாக பட்டி பாஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பாரதிய கிஷான் சபை நிர்வாகிகள் சதீஸ்பாபு, ஜெயபால் ஆகியோர் பேசுகையில், வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண் டும் என்றும் வலியுறுத்தினர். கூடலூர், பளியங்குடி பகுதிகளில் காட்டு யானைகளால் வாழை, தென்னை விவசாயம் பாதிக்கப் பட்டு வருவதால், அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.கோரிக்கைகளுக்கு பதிலளித்த துணை இயக்குநர் விவேக்குமார் பி.யாதவ், கூட் டத்தில் பங்கேற்காதஅலுவலர்களிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என்றார்.