ரத்தவெறி பிடித்த இஸ்ரேலுக்கு சலுகை வழங்குவதை நிறுத்த வேண்டும்
11 Apr 2026, 5:30 am

ரத்தவெறி பிடித்த இஸ்ரேலுக்கு சலுகை வழங்குவதை நிறுத்த வேண்டும்

ஹிஸ்புல்லா அமைப்பின் மீது தாக்கு தல் நடத்துவதாகக் கூறி, லெப னான் நாட்டின் மீது இஸ்ரேல் தொ டர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப் பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் இன்னும் தாக்குதலை நிறுத்தவில்லை. இந்நிலையில், இந்த போரை முடிவு க்கு கொண்டு வரும் வகையில் அமெ ரிக்காவில் அடுத்த வாரம் லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இஸ்ரே லுக்கு இலவச சலுகைகளை வழங்கு வதை லெபனான் அரசு நிறுத்த வேண்டும் என ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகை யில்,“கடந்த புதன்கிழமை லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குத லில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். இது ரத்தவெறி பிடித்த குற்றச் செயல். பழைய நிலைக்குத் திரும்புவதை நாங்கள் ஏற்க மாட்டோம். லெபனான் அதிகா ரிகள் இஸ்ரேலுக்கு இலவச சலுகைகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என நைம் காசிம் கூறியுள்ளார்.