தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

27 Dec 2025, 4:49 pm
திருச்சி விரைவு செய்திகள்

வாழ்வாதாரத்தை பாதுகாத்திட காரைக்குடி வட்டாரத்தில்  பைக் டாக்சியை தடுத்திடுக!

ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை சிவகங்கை, டிச.27- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகர பகுதி களில் ரேபிடோ, ரெட் பைக் டாக்ஸி என்ற முறையில்  அனு மதி பெறாமல் சொந்த பயன்பாட்டிற்கு உள்ள இருசக்கர  வாகனங்களில் பொதுமக்களை சவாரி அழைத்துச் சென்று, கட்டணம் வசூல் செய்கிறார்கள். இதை தடுக்க  வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பே காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளரை அலுவல கத்தில் நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டது. பைக்  டாக்ஸி ஓட்டுநர்களிடம் தொலைபேசியில் பேசி இனி மேல் இதுபோன்று நடைபெறாது என்று சங்க நிர்வாகி களிடம் தெரிவித்தார். ஆனால் மீண்டும் டிசம்பர் 5 அன்று  இரவு காரைக்குடி ரயில் நிலையத்தில்  பைக் டாக்சி வந்துள்ளனர். காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.  காரைக்குடி அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து ஆய்வாளர் புகார் அளித்ததன் அடிப்படையில் மேற்படி 2  இரு சக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறி முதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.   டிசம்பர் 24 அன்று மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும்  அழகப்பா புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர், சங்க  நிர்வாகிகள் மேற்படி இருசக்கர வாகன உரிமையா ளர்கள் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதன் அடிப்படையில் மோட்டார் வாகன ஆய்வா ளரின் சமரச முயற்சியால்  மேற்படி நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்காமல் இரு சக்கர  வாகனங்களையும் விடு வித்துவிட்டனர். காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் காரைக்குடி நகரத்தில் தொடர்ச்சியாக பைக் டாக்ஸி ஆட்டோ ஸ்டாண்டுகளில் வந்து ஏற்றுவதால் இருவருக்கும் மோதல்  போக்கு உருவாக வாய்ப்பு உள்ளது. ஆகையால் தாங்கள்  பைக் டாக்ஸி பதிவு எண்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு கொடுத்தனர்.    சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட தலைவர் கருப்பு ,காரைக்குடி மாநகர் செயலாளர் வெங்கட், மாவட்ட பொருளாளர் குமாரவேலு நகர பொருளாளர் முருகேசன் ஆகியோர் வட்டார போக்குவரத்து அலுவலர் பெரியண்ணனை சந்தித்து மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தினர். வட்டார போக்குவரத்து அலுவலர் உடனே நடவடிக்கை மேற்கொள்வதாக சங்கத் தலைவர்களிடம் தெரிவித்தார்.

இரும்பு கதவு விழுந்ததில்  2 சிறுமிகள் பலியான துயரம்

சிவகாசி, டிச.27- சிவகாசியில் வீட்டின் முன் பக்கம் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் மீது இரும்புக் கதவு உடைந்து  விழுந்தது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகாசி அருகே கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் ராஜா மணி. இவரது மனைவி ராஜேஸ்வரி. சிவகாசி அனைத்து  மகளிர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரு கிறார். கவின்(11) என்ற மகனும், கமலிகா(9) என்ற மகளும்  உள்ளனர். இராஜேஸ்வரியின் சகோதரி தனலட்சுமி சங்கரன் கோவிலில் உள்ளார். இவர் தனது குழந்தைகளான நிஷாந்த்(6), ரிஷிகா (4) ஆகியோருடன் அரையாண்டு விடுமுறைக்காக சிவகாசிக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் முன் பகுதியில் கமலிகாவும், ரிஷிகாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் முன் பக்கத்தில் இருந்த இரும்புக் கதவு சுவருடன் சரிந்து சிறுமிகளின் தலையில்  விழுந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்ட உறவினர்கள் சிவகாசி தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே இரு சிறுமிகளும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இராஜபாளையத்தில்

பென்னிங்டன் நூலக ஆண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், டிச.27- ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பென்னிங்டன் நூலகத்தின் 150-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் இரண்டாம் நாள் நிகழ்வு சிறப்பாக  நடைபெற்றது. பென்னிங்டன் நூலகத்தின் துணைத் தலைவர் முத்து பட்டர் வரவேற்றார். ராஜாராம் நிகழ்ச்சியைத் தொகுத்து  வழங்கினார். சாலமன் பாப்பையா வை நடுவராக கொண்ட பட்டிமன்றம் நடை பெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.